தமிழ் ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை! செ.நிலாந்தன் ஆதங்கம்(Video)
இந்த நாட்டில் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் செ.நிலாந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டு.ஊடக அமையத்தில் நேற்று(23.08.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் ஜனநாயகத்தின் நான்காவது தூணாகவுள்ள ஊடகத்துறை இன்று அச்சுறுத்தலுக்குள்ளாகியதையே மயிலத்தமடு,மாதவனை பிரதேசத்தில் நடைபெறும் சம்பவம் காட்டுவதாக நிலாந்தன் தெரிவித்தார்.
ஊடகத்துறைக்கு மிகப்பெரும் சவால்
இதேவேளை ஊடகவியலாளர்களின் புகைப்பட கருவிகளிலிருந்து ஆவணங்கள் அளிக்கப்பட்டது. இச்செய்தி வெளிவரக்கூடாது எனக் கூறி வெற்றுத்தாலில் கையெழுத்து பெற்றதுடன் அவ்வாறு கையெழுத்து போடவில்லை என்றால் இங்கிருந்து செல்ல முடியாது என அச்சுறுத்தியமை ஊடகத்துறைக்கு விடுக்கப்பட்ட மிகப்பெரும் சவாலாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் மயிலத்தமடு,மாதவனை பிரதேசத்தில் நடைபெறும் அனைத்து சம்பவங்களின் பின்னணியிலும் மகாவலி அதிகார சபையினரே பின்புலமாக செயற்படுவதாக மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் இதன்போது குற்றஞ்சாட்டினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri
