பல்பொருள் அங்காடிகளில் கூரிய ஆயுதங்களுடன் நுழையும் நபர்கள்! ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
நாடு முழுவதிலும் உள்ள பல்பொருள் அங்காடிகளில் பொருட்கள் திருடப்படும் சம்பவங்கள் தொடர்ந்து பதிவாகி வருவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் இவ்வாறு திருட்டு சம்பவங்கள் அதிகளவு பதிவாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கூரிய ஆயுதங்களால் தாக்குதல்
இது தொடர்பில் கொழும்பு நகர மையத்தில் அமைந்துள்ள பிரதான பல்பொருள் அங்காடியின் முகாமையாளர் ஒருவர் கூறுகையில்,

பல்பொருள் அங்காடியில் பொருட்களை திருடுபவர்கள் தொடர்ந்து அடையாளம் காணப்பட்டாலும், அந்த திருடர்கள் கூரிய ஆயுதங்களால் ஊழியர்களை காயப்படுத்துவது பிரச்சினையாக மாறியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த பல்பொருள் அங்காடியின் ஊழியர்கள் இருவர் திருடர்களால் கூரிய ஆயுதங்களால் வெட்டப்பட்டதில் காயமடைந்துள்ளதாக முகாமையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதெல்லாம் வெறும் ட்ராமா! மோகன் சர்மா முதியோர் இல்ல நாடகம் குறித்து குட்டி பத்மினி பரபரப்பு பேட்டி Manithan
இலங்கையில் அரைகுறை கவர்ச்சி உடையில் வலம்வந்த சீரியல் நடிகை தர்ஷனா... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam