இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு நெருக்கடி: குடிபானங்களின் விலையும் அதிகரிப்பு
சீனியின் விலை கடந்த வாரத்திலும் பார்க்க தற்போதைக்கு 20 முதல் 30 ரூபா வரை அதிகரித்துள்ளது.
இதற்கமைய, மொத்த விற்பனை விலை அதிகரிப்பின் காரணமாக சீனிக்கு தற்போது சில்லறை விலையில் 30 ரூபா வரை அதிகரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது.
சீனி விலை அதிகரிப்பு
இதன் பிரகாரம் தற்போதைய ஒரு கிலோ சீனியின் விலை 320 ரூபாவாகும். சதொச நிறுவனமும் சீனியின் விலையை 7 ரூபாவினால் அதிகரித்துள்ள போதும், அதன் விற்பனை விலையான 170 ரூபா விலை தற்போதைக்கு 177 ரூபாவாக மட்டுமே கூடியுள்ளது.
எனினும் குறித்த விலையில் சதொசவின் எந்தவொரு கிளையிலும் சீனி விற்பனைக்கு கிடைப்பதில்லை என்று நுகர்வோர் பலரும் முறைப்பட்டுள்ளனர்.
அதே நேரம் சீனியின் விலை அதிகரிப்பு காரணமாக தேநீர் உள்ளிட்ட பானங்களின் விலைகளும் உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலைகளில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.