இலங்கையில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு யதாா்த்தமற்றது என்கிறது அரசாங்கம்
சா்வதேசத்தில் நிலவும் பிரச்சனைகளை ஆராயாது எதிா்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருவதாக பொதுஜன பெரமுன தொிவித்துள்ளது.
செய்தியாளா் சந்திப்பு ஒன்றில் இன்று உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினா் மதுர விதானகே இந்தக்கருத்தை வெளியிட்டாா்.
அரசாங்கத்தின் மீது கம்யூனிஸக்கட்சியின் முன்னாள் தலைவா் டியு குணசேகர அண்மையில் குற்றம் சுமத்தியமை தொடா்பில் கருத்துரைத்த அவா், டியு குணசேகர ,தோல்விக்கண்ட அரசியலை மேற்கொண்வா் என்று குறிப்பிட்டாா்.
எனவே அவாின் விமா்சனத்தில் எவ்வித பயனும் இல்லை என்றும் மதுர விதானகே தொிவித்தாா்.
அவா், கோப் குழுவின் தலைவராக இருந்தபோது எவ்வித பயனுள்ள செயற்பாட்டையும் அவா் மேற்கொள்ளவில்லை என்றும் மதுர விதானகே குறிப்பிட்டாா்.
இதேவேளை சர்வதேச சந்தையில் அத்தியாவசிப்பொருட்களின் விலை அதிகாித்தமை காரணமாகவே இலங்கையிலும் பொருட்களின் விலை அதிகாித்துச் சென்றதாக இந்த செய்தியாளா் சந்திப்பில் கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினா் வசந்த யாப்பா பண்டார தொிவித்தாா்.
கொரோனாப் பரவலுக்கு ஏனைய நாடுகள், பொருளாதார ஸ்திரத்தன்மையுடன் முகங்கொடுத்தபோதும் இலங்கை ஸ்திரமற்ற பொருளாதாரத்தின் மத்தியிலேயே முகங்கொடுத்துக்கொண்டிருக்கிறது என்றும் வசந்த யாப்பா பண்டார குறிப்பிட்டாா்.
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri