பிரிக்ஸ் அமைப்பில் இலங்கையும் உறுப்புரிமை பெற வேண்டும்: ஜனாதிபதியிடம் கோரிக்கை
பிரேசில், ரஷ்யா, சீனா, இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய ஐந்து நாடுகளின் பெயரால் அழைக்கப்படும் பிரிக்ஸ் அமைப்பில் இலங்கை உறுப்புரிமை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிவித்துரு ஹெல உறுமய தலைவர் எம்.பி.உதய கம்மன்பில ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கம்மன்பில ஜனாதிபதிக்கு எழுதிய பகிரங்கக் கடிதத்தில், உலகளாவிய பொருளாதார மற்றும் அரசியல் போக்குகள் வேகமாக மாறிவருவதாகவும், உலக வல்லரசு ஆசியாவை நோக்கி நகர்வதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார் எனவே, இலங்கை தனது வெளியுறவுக் கொள்கையை சமீபத்திய சூழலில் மறுபரிசீலனை செய்து அதற்கேற்ப மறுசீரமைக்க வேண்டிய நேரம் இது என்று அவர் கூறியுள்ளார்.
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற பிரிக்ஸ் அமைப்பின் அண்மைய உச்சிமாநாட்டில், சவுதி அரேபியா, ஈரான், எத்தியோப்பியா, ஐக்கிய அரபு ராச்சியம் , எகிப்து மற்றும் அர்ஜென்டினா ஆகிய ஆறு நாடுகள் முழு அங்கத்துவத்தைப் பெற்றுள்ளன.
சேருவதற்கான முயற்சியில் பல நாடுகள்
இன்னும் பல நாடுகளும் இதில் சேர முயற்சிக்கின்றன சர்வதேச நாணயமாக அமெரிக்க டொலர், அமெரிக்கா உள்ளிட்ட G7 நாடுகளின் ஆதரவுடன் உலக சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
எனினும் அமெரிக்க டொலரைப் பொருட்படுத்தாமல் சர்வதேச பரிவர்த்தனைகளுக்கான
பொதுவான அணுகுமுறையை BRICS இப்போது ஆராய்ந்து வருகிறது என்றும் கம்மன்பில
தெரிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri
