தங்கச்சங்கிலியை அறுத்துச் சென்றவர்களை தேடி பொலிஸார் தீவிர வலைவீச்சு (VIDEO)
மஹரகம , பமுனுவ பகுதியில் வீதியில் சென்றுகொண்டிருந்த பெண்ணொருவரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை அபகரித்து, மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் அபகரித்த கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி செல்லும் காட்சி அருகிலிருந்த பாதுகாப்பு கமராவில் பதிவாகியுள்ளது. இதன்படி பஜாஜ் XJ 1733 என்ற இலக்கத்தகடு கொண்ட மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இவ்வாறு கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதுடன், குறித்த இரு நபர்களையும் தீவிரமாக தேடுகின்ற நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாகவும் பொலிஸார் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்ற குற்றச்சாட்டில் இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.





ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam
