விஷம் கலந்த அரிசி குறித்து வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது!லசந்த ரத்னவீர தகவல்

Sri Lanka Economic Crisis Sri Lanka Sri Lanka Food Crisis
By Kamel Sep 17, 2022 05:04 PM GMT
Report

விஷம் கலந்த அரிசி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக ஞாயிறு சிங்கள நாளிதழ்களில் வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் பொய்யானது என பூச்சிக்கொல்லி பதிவு அலுவலகத்தின் பதில் பதிவாளர் லசந்த ரத்னவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை பூச்சிக்கொல்லி பதிவேட்டு அலுவலகத்தினால் அவ்வாறான ஆய்வு முடிவுகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வொன்றை மையப்படுத்தி, குறித்த செய்தித்தாள்கள் செய்திகளை எழுதியுள்ளன. எனினும், இந்தச் செய்திகளின் உள்ளடக்கங்களில் குறைபாடுகள் உள்ளதாகவும் ரத்னவீர கூறுகின்றார்.

விஷம் கலந்த அரிசி குறித்து வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது!லசந்த ரத்னவீர தகவல் | Srilanka Rice Special Information

பூச்சிக்கொல்லி பதிவு அலுவலகத்தின் தகவல்

இவ்வாறான பொய்யான செய்திகள் மூலம் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்படக் என்பதால், இவ்வாறான விடயங்களை எழுதும்போது உரிய தரப்பினரிடம், சரியான தகவல்களைப் பெற்று, உறுதி செய்துகொள்வது மிகவும் பொருத்தமானது எனவும் பூச்சிக்கொல்லி பதிவு அலுவலகத்தின் பதில் பதிவாளர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த ரத்னவீர,

இது 2017ஆம் ஆண்டு கண்டி பிரதேசத்தில் 68 மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகளை அடிப்படையாக வைத்து இந்தச் செய்தி எழுதப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஆய்வுத் தகவல்களும் தவறாகப் பதிவாகியிருக்கிறது என்று ரத்னவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

விஷம் கலந்த அரிசி குறித்து வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது!லசந்த ரத்னவீர தகவல் | Srilanka Rice Special Information

வெற்று உலோகத்துகள்கள்

வெற்று உலோகத் துகள்கள் பொதுவாக சிறிய அளவில் இருப்பதால், அவை பத்து இலட்சத்தில் ஒரு பங்காகவே அளவிடப்படுகின்றன. ஆனால், அந்த வெற்று உலோகங்கள் நூற்றுக்கு ஒரு பங்கு வீதத்தில் இருப்பதாக இந்தப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து பூச்சிக்கொல்லி பதிவாளர் நாயகம் கூறுகையில், உலகில் எங்கும் சதவீதத்தில் வெற்று உலோகத்துகள் இருப்பதாக கண்டறியப்படவில்லை. அது நடைமுறையில் இல்லை. முறையான ஆய்வுகள் இன்றி இந்த ஆய்வு அறிக்கை பதிவாகியுள்ளது.

விஷம் கலந்த அரிசி குறித்து வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது!லசந்த ரத்னவீர தகவல் | Srilanka Rice Special Information

தவறான கருத்துகளை பிரதிபலிக்கும் வகையில் தகவல்களை வெளியிடுவது பொதுமக்களுக்கு இடையூறாக மாறிவிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் முதல் நடத்தப்பட்ட சோதனைகளின் மூலம் இவ்வாறான எந்தவொரு முடிவுகளும் பதியப்படவில்லை என்றும் அவ்வாறு இருக்கும்பட்சத்தில் இப்படியான செய்திகளை வெளியிடுவது அடிப்படையற்றது என்றும் தெரிவித்தார்.

தவறான ஆதாரங்களுடன், வெளியிடப்பட்டுள்ள இந்தச் செய்திகள் மூலம் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் இந்த செயற்பாடு தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறையிட நடவடிக்கை எடுத்து வருவதாகவும், வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சிசிர கொடிகார தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது. 

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US