இலங்கையில் இன்று 2530 பேருக்கு கோவிட் தொற்று! - 23 பேர் பலி
இலங்கையில் மேலும் 1,305 பேருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
குறித்த அனைவரும் புதுவருட கோவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார். இதன்படி, இன்று இதுவரையில் 2,530 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் இதுவரையில் 131,060 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,030 பேர் இன்று பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 105,611 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களில் 850 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று மட்டும் 23 கோவிட் தொற்று தொடர்பான மரணங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan