இலங்கையின் பல பகுதிகளிலும் இன்று மழை பெய்யும்
இலங்கையின் இன்றைய வானிலையில், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என்று வானிலை மையம் எதிர்வு கூறியுள்ளது.
மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும். வடமத்திய மாகாணத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.
அதேநேரம் ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இதேவேளை இலங்கையின் தீவு முழுவதும் மணித்தியாலத்துக்கு 40-50 கிலோமீற்றா் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் எதிர்வு கூறியுள்ளது