மாகாணசபைத் தேர்தல்களில் கட்சி சாரா பொது வேட்பாளர்களும் பொது மக்கள் ஆணையும்

Srilanka Election Gotapaya Mahindha
By DiasA Apr 26, 2021 10:35 PM GMT
Report

மாகாண சபைகளுக்கான தேர்தல் நடக்குமா? இல்லையா? நடத்துவார்களா? நடத்த மாட்டார்களா?என்ற ஐயம் இன்று தோன்றியிருக்கிறது. இவ்வாதப் பிரதிவாதங்களுக்கும் பலதரப்பட்ட கேள்விகளுக்கும் விடை தேடிக் கொண்டிருக்கையில், கேள்வி பதில்கள் ஒருபுறம் இருக்க இவற்றுக்கப்பால் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று சர்வதேச அழுத்தங்கள் இலங்கை மீது பலமாகவும், வலுவாகவும் உள்ளது என கட்டுரையாசிரியர் ச.வி கிருபாகரன் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

குறித்த கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இப்பின்னணியில் ஆறு மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தல் நடக்குமென மூத்த அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார்.மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏழு மாகாணங்களிலும் ஆளும் தரப்பு வெற்றி பெறமுடிந்தாலும் அது ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல்களில் பெற்றது போன்ற பெரும் வாக்குப் பலத்தை பெற முடியாது. குறைந்த வாக்குகளை மாத்திரமே பெற்று விளிம்பு நிலையிலேயே வெற்றி பெற முடியும். அது ஜனாதிபதி கோட்டபாயவினதும், பிரதமர் மஹிந்தவினதும் வாக்குவங்கி வீழ்ச்சியை வெளிப்படுத்தும்.

எனவே நடைமுறை ரீதியில் மாகாண சபைத் தேர்தலுக்கு ராஜபக்ச குடும்பம் தயாரில்லை. இருப்பினும் இந்தியாஇ அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச அழுத்தங்களின் பின்னணியில் தேர்தலை நடத்துவதற்கான அற்பசொற்ப வாய்ப்புகள் இருக்கின்றன.

எனவே மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடக்கும் என்ற ஒரு எடுகோளின் அடிப்படையில் தமிழர்கள் இந்த மாகாணசபைத் தேர்தல் அரசியலை தமக்கு இருக்கின்ற வாய்ப்பிற்கும் சூழலுக்குப் பொருத்தமாக வடிவமைப்புச் செய்து தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்.

இந்த நிலையில் தான் தமிழ் மக்கள் அரசியல் சுபிட்சத்தை கருத்தில் கொண்டு கட்சி பேதங்களை மறந்து தமிழ் தலைமைகள் ஒன்றிணைந்து வடக்கிலும் கிழக்கிலும் பொது வேட்பாளர்களை முன்னிறுத்தி தமிழ் மக்களின் வாக்குகளை திரட்ட வேண்டும்.

பொது வேட்பாளர்கள் என வரையறுக்கப்படுபவர்களை இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய தமிழ்த் தேசியப் பற்றாளர்கள், சமூக முன்னோடிகள், சமூகப் பெறுமானம் மிக்கவர்கள்,அல்லது கல்லூரி அதிபர்கள்இ நிர்வாக அதிகாரிகள். அரச சார்பற்ற நிறுவனங்களின் முகாமையாளராக இருந்தவர்கள், பெண் கல்லூரி அதிபர்கள்இ பேராசிரியர்கள், கல்விமான்கள் என நிர்வாகம் தெரிந்தவர்களை தமிழ் அரசியலில் பொதுவேட்பாளர்களாக முன்னிறுத்தி இந்த தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்.

தேர்தல் என்பது தமிழ் மக்களைப் பொறுத்தளவில் அவர்களுடைய வாக்குகளை ஒன்றுதிரட்டி குவித்து தமிழ் மக்களுக்கான ஒரு மக்கள் ஆணை பெறுவதுதான். இதனையே ஈழத்தமிழர்கள் தமது முதல்தர இலட்சியமாகக் கொண்டு செயற்படவேண்டு. இத்தகைய ஒரு மக்கள் ஆணைதான் சிங்கள தேசம் ராஜபக்ஷாக்களுக்கு அளித்துள்ளதாக கூறுகிறார்கள்.

எனவே தமிழ் மக்களுக்கு எதிராக ராஜபக்சக்கள் முன்வைக்கும் சிங்கள பௌத்த மக்கள் அணைக்கு மாற்றாக அதற்கு ஈடுகொடுக்க கூடியதான ஒரு தடுப்புக் கேடயமாக தமிழ்மக்கள் ஆணையை பெற்று நிலை நிறுத்த வேண்டும்.

எனவே இவையெல்லாவற்றிற்கும் முதலாகக் தேவைப்படுவது தமிழ் தலைமைகள் தமக்கிடையே எல்லா வகையிலும் ஐக்கியப்படுதலாகும். இவ்வாறு மாகாணசபைத் தேர்தலை எதிர்கொண்டு தமிழ் மக்களின் வாக்குகளை கூட்டி ஒன்று குவித்தால் தமிழ் மக்கள் அரசியல் தளம் என்பது புதிய தேசிய கட்டுமானத்தை நோக்கி நகர முடியும். இவ்வாறு தமிழர்கள் பொது வேட்பாளரை நிறுத்தினால் நிச்சயமாக எதிரி அரசியல் அர்த்தத்தில் திணறிப்போவர் என்பது திண்ணம்.

இத்தேர்தல் நடக்குமிடத்து இத்தேர்தலை எதிர்கொள்வதில் தமிழ் தரப்பு முகம்கொடுக்க வேண்டிய பிரச்சினைகள் பற்றியே நாம் கவனத்திற்கொள்ள வேண்டும். அதுவே எமக்கு முக்கியமானது.

கடந்த இரு தேர்தல்களிலும் தமிழர் தரப்பு அரசியல் நிலைப்பாடு சீரழிந்து கிடக்கிறது. இந்த சீரழிவிலிருந்து மீட்டெடுப்பதற்கு இந்த தேர்தலை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை தமிழ்த் தரப்பு தீர்மானம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இத்தேர்தல் பற்றி கடந்த வாரம் 'மாகாணசபையை எங்கிருந்து திட்டமிடுவது' என்ற தலைப்பில் அரசியல் ஆய்வாளர் திரு. ம. நிலாந்தன் எழுதிய கட்டுரையில் வடக்கிலும் கிழக்கிலும் பலதரப்பட்ட பிரிவுகளாக தமிழர் தரப்பு பிரிந்து முட்டிமோதி சீரழிவுக்கு உட்பட்டு இருப்பதை தெளிவாக வழிகாட்டி இருந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

கடந்த 12 வருடங்களாக தமிழ் அரசியல் கட்சிகள் எதனையும் செய்யவில்லை. சாதிக்கவும் இல்லை. எனவே இனிவரும் காலத்திலும் இவர்கள் எதனையாவது சாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கவும் முடியாது.

கடந்தமுறை நடந்த மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கிடைத்த வாக்குகள் இம்முறை கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. வடக்கில் தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகள் மூன்று பிரிவுகளாக உடைந்து கிடக்கின்றன.

எனவே வடக்கில் தேர்தல் பெரும் நெருக்கடிக்குள் சிக்கி இருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது. அத்தோடு கூட்டமைப்புக்குள் சுமந்திரன் -- மாவை பனிப் போர் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இது ஒரு பெரும் பின்னடவை கொடுக்கும். அதே நேரத்தில் சிங்கள தேசியக் கட்சிகளுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் தமிழ் தேசிய விரோத நிலைப்பாடு உடைய இரு அணிகள் வடக்கில் களமிறங்கும். இத்தகைய அரச சார்பு அணியினர் முன்னரைவிடவும் சற்று மேலதிக பலம் பெறக்கூடிய வாய்ப்புகளும் உண்டு.

மேலும் கிழக்கிலும் தமிழ் தரப்பு பிரிந்து கிடப்பதோடுஇ முஸ்லிம்களும் தனியாக ஓரணியில் நிற்பதனால் முஸ்லீம்களையும் கவர்ந்து அரவணைக்க கூடிய வகையில் கிழக்கின் அரசியல் வியூகம் அமைக்க வேண்டும். இன்று இருக்கின்ற நிலையில் தமிழ் தேசியம் பேசுகின்ற பல்வேறு அணிகளாக பிரிந்து கிடக்கின்ற தமிழ்த் தரப்புக்கள் ஒரு பொது உடன்பாட்டுக்கு வந்து ஒரு மோதல் தவிப்பு உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்தி ஒரு பொது உடன்பாட்டுக்கு வரவேண்டும்.

இன்றைய பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு இந்த மாகாண சபை தேர்தலை ஒரு தற்காலிக உத்தியாக பயன்படுத்த தமிழ் தரப்பு தயாராக வேண்டும். இதனை புத்தி பூர்வமாக அணுகி தமிழ் மக்களுக்கு இடையிலான இணைந்த கூட்டு ஒற்றுமையை (ளழடனையசவைல) அதாவது ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கு ஏற்ற வகையிலான ஒரு பரிசோதனைக் களமாக இத்தேர்தல்க் களத்தை பயன்படுத்த தமிழ் தரப்பு தயாராக வேண்டும்.

மாகாணசபையினுடாக எவ்வாறு அரசியல் பொருளாதார விருத்தியை மேம்படுத்தலாம்இ அதற்கேற்ற வகையில் இருக்கின்ற அரசியல் அமைப்பு நடைமுறைகளுக்கூடாக தமிழ் மக்களுக்கான மேம்பாடுகளை மேற்கொள்ளத்தக்க வழிவகையை மாகாணசபைத் தேர்தல் மூலம் தேடுவதும் கண்டறிவதும் அதனை செயற்படுத்துவதுவதற்கான அரசியல் சாணக்கியத்தை கையாளவேண்டும்.

இப்போது தமிழ் மக்களுக்குள்ள முதல் பிரச்சனை ''மக்கள் ஆணையைப் பெற்று வந்திருக்கிறோம்'' என்று கூறிக் கொண்டு இருக்கும் சிங்கள பௌத்த பேரினவாத ஆட்சியாளர்கள் தமிழ் மக்களை ஒடுக்குவதற்கு பயன்படுத்துகின்ற அவர்களின் ''மக்கள் ஆணை '' என்பதனை எவ்வாறு எதிர்கொள்ளவது என்பதுதான்.

இந்த இனவாத அரசுக்கு எதிராக, இந்த இனவாத ஒடுக்குமுறை அரச இயந்திரத்துக்கு எதிராகஇ இந்த அரசாங்கத்துக்கு எதிராக தமிழ் மக்கள் தங்களை ஒரு பெரும் சக்தியாக உருத்திரட்டி நிலைநிறுத்த வேண்டியது.

ஒரு வரலாற்றுக் கட்டாயமாகும், அதுவே தமிழ் மக்களின் தேசிய அபிலாசைகளை முன்வைக்கும் அனைத்துத் தரப்பினரின் கடமையுமாகும். இந்தப் பின்னணியில் தமிழர் தரப்பு, பலதரப்பட்ட அரசியல் கட்சிகளும் குழுக்களும் நாடாளுமன்றத் தேர்தல்இ உள்ளுராட்சி தேர்தல்களில், தத்தமக்கான ஆசனங்களை பிடித்து வைத்துக்கொண்டு வெறுமனே உட்கார்ந்துள்ளன.

இலங்கையில் காணப்படும் அரசியல் யாப்புக் கூடாக எதையெல்லாம் செய்ய முடியுமோ அவற்றை எல்லாம் அடையாளங்கண்டு அவற்றை செய்ய வேண்டும். இந்நிலையில் தற்போது எதிரி நடத்தக்கூடிய தேர்தலைப் பயன்படுத்தி அந்த மாகாண சபைத் தேர்தலை ஒரு அரசியல் நிர்வாக ஒழுங்கு முறையாக, தமிழ் மக்களின் ஏகோபித்த பலத்தை ஒன்று திரட்டக்கூடியதற்கான வகையில் கட்சி பேதங்களை தவிர்த்து தமிழ் மக்களின் சுபீட்சமான வாழ்விற்கான வழிவகைகளை உருவாக்கக் கூடிய விதத்தில் பொது வேட்பாளரை நிறுத்தி தமிழ் மக்களின் ஆணையை முன்னிறுத வேண்டியதே இன்றைய காலத்தின் தேவையாகும்.

எனவே இங்கே இரண்டு வகையான விதிகள் நமக்குண்டு. (1) பொது வேட்பாளரை நிறுத்தி தேர்தலை எதிர் கொண்டால் தமிழ் மக்கள் ஒரு குடைக்கீழ் நின்று ஒரு தேசியப் புரட்சியை ஏற்படுத்த வழியேற்படும்.

(2) அதேநேரத்தில் தமிழ் மக்கள் திரளைக் கண்டு திகில் அடைய வழிகள் ஏற்படும். நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வது தமக்காக போராடுவதற்கே. அவர்களுடைய பணி என்பது போராடுவதாக மாத்திரமே இருக்க வேண்டும். அவர்கள் தாம் போராட வேண்டிய பணியை விடுத்து நிர்வாகப் பணிகளில், நிர்வாக நடைமுறைகளில் தமது மூக்கை நுழைக்க கூடாது.

முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்று சொல்லப்படுபவர்கள் இந்த நிமிடம் வரை சாதித்தது என்று ஒன்று கிடையாது. எனவே இனியாவது உங்கள் தவறை உணர்ந்து மாகாண சபைத் தேர்தலில் பொது வேட்பாளராக அரசியல் கட்சி சாராத பிரதிநிதிகளை முன்நிறுத்த முன்வாருங்கள்.

மாகாணசபைத் தேர்தல் என்பது கூடவே நிர்வாக அரசியல் சம்பந்தமானது. எனவே நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு தமிழ் மக்கள் வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் பதவி என்பது போராடுவதற்கான அனுமதிப்பத்திரம் ஆகும். அதன்படி அந்த நாடாளுமன்ற பதவிகளை வைத்துக்கொண்டு போர்க்களம் புகுந்து போராடுங்கள் என்பதே அவர்களுக்கு வரலாறு இடும் கட்ளையாகும்.

அடுத்து மாகாணசபைத் தேர்தல் என்பது தமிழ் மக்களை நிர்வகிப்பதற்கான தமிழ் மக்களுக்கான அரசியல் பொருளியல் விருத்தியை மேற்கொள்வதற்காக இலங்கை அரசியல் யாப்பு சட்ட வரையறைக்குள் நின்று கொண்டு செய்யக்கூடிய அனைத்து வகையான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதாகவும் அமைகிறது.

தமிழர் தரப்பில், போராடுவதும் போராடுவதற்கான அரசியல் என்றும் ஒன்றை வகுத்து அதனை நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சிகளும் ஒருபக்கம் முன்னெடுக்க வேண்டும் . அத்துடன் மாகாணசபை நிர்வாகத்துக்கு நிர்வாக அரசியல் என்று இரண்டு பிரிவுகளாக வகுத்து தமிழ் தேசியத்தை கட்டமைப்பு செய்ய வேண்டும். தமிழர் தரப்பில் அரசியல் யாப்பை கையாளத் தெரிந்தவர்கள் என்று அரசியல் பரப்பில் யாரும் கிடையாது.

சட்டத்திற்குள்ளால் அரசியல் யாப்பை பார்ப்பவர்களை அன்றி பண்பாட்டியலுக் கூடாகவும், நடைமுறை ரீதியிலும்இ தத்துவார்த்த அடிப்படையிலும் அரசியல் யாப்பை அணுகவோ, புரிந்துகொள்ளவோ இன்றைய அரசியல் தலைவர்களுக்கு அறிவியல் கொள்ளளவு கிடையாது என்பது துரதிஸ்டமே.

கிழக்கு மாகாணத்தில் தேர்தலை எதிர்கொள்ள முஸ்லீம்களுடன் கூட்டுச் சேருதல். இருபகுதியினரும் இணைந்து முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு தமிழ் முதலமைச்சரும் அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரையும் நியமிப்பதாக உடன்பாட்டுக்கு வருதல் இரு தரப்பினருக்கும் நல்லது. அதனடிப்படையில் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். அடுத்து வடக்கு, கிழக்கு என்ற இரண்டு மாகாணங்களுக்குமான ஒரு பொதுவான நிபுணர் குழு ஒன்றை நியமித்தால். அந்த நிபுணர் குழுவில் அல்லது 9 அல்லது 11 அல்லது 13 உறுப்பினர்களை கொண்டமைய வேண்டும்.

தெரிவாகிய இந்த நிபுணர் குழு வட-கிழக்கின் புனர்நிர்மாண பணிகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு தனது பரிந்துரைகளை வழங்கும். இந்நிபுணர்குழு வட-கிழக்கு நிழல் நிர்வாக பொறிமுறையாகவும் இயங்கமுடியும். அதில் முதற்கட்டமாக விதவைகளுக்கான வாழ்வாதார திட்டங்களை முன்னெடுத்தல்.

கிழக்கு மாகாணத்தில் அடிப்படை வசதிகள் அற்ற பின்தங்கிய பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்கான கட்டமைப்புகளை உருவாக்கி செயல்படுத்துதல். சீரழிந்து போயுள்ள சமூக வாழ்வியலை கட்டமைப்பு செய்வதற்கு தமிழர் தாயகத்தின் அனைத்து வளங்களையும் பயன்படுத்துதல் என்ற அடிப்படைகளை வகுக்க வேண்டும். அத்தோடு புலம்பெயர் மக்களின் உதவிகளை பெற்று கிழக்கின் மக்களது வாழ்வியலை பலப்படுத்த முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

வட-கிழக்கு மாகாணத்திற்கான சுற்றுச்சூழல் பாதுகாப்பு நீர்வளப் பாதுகாப்பு என்பவற்றை உறுதிப்படுத்துவதோடு குழந்தைகளுக்கான கல்வி வசதிகளை ஒழுங்குபடுத்தல்.போன்றவற்றிற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் இன்று மாகாண சபைகளுக்கான பொது வேட்பாளர்களை நிறுத்துவதே வரலாற்றின் கட்டளை. அதுவே தமிழ் மக்களின் தேசிய ஐக்கியத்தை நிலை நிறுத்துவதற்கான ஒரு வழியாகவும் அமையும்.

வடக்கிற்கு ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவது போலவே கிழக்கு மாகாணத்திலும் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தவேண்டும். முதலாவதாக மாகாணசபைத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பதிலேயே நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

தேர்தலின் பின்னான அரசியல் செயற்பாடுகள் என்பதனை தேர்தலின் பின்னர் கவனித்துக் கொள்ளலாம். எனவே இப்போது எம் முன்னே எழுந்து நிற்கின்ற முதலாவது நிபந்தனை தமிழ் மக்கள் எல்லா வகையிலும் ஐக்கியப்பட வேண்டும் என்பதே. தமிழ் மக்களுக்கு உடனடி தேவை ஐக்கியம் ஐக்கியம் ஐக்கியம். இதுவே எமது தாரக மந்திரமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

1ஆம் ஆண்டு நினைவஞ்சலி 14ஆம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வவுனியா, Auckland, New Zealand, சிட்னி, Australia

18 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, காங்கேசன்துறை, கொழும்பு, Markham, Canada

18 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி கிழக்கு, வல்வெட்டி, அல்வாய், தெஹிவளை

01 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Drancy, France

15 Apr, 2023
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
மரண அறிவித்தல்

ஆத்திமோட்டை, Hayes, United Kingdom

18 Apr, 2025
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

பண்ணாகம், நியூ யோர்க், United States

18 Mar, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Montreal, Canada

19 Apr, 2004
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மயிலிட்டி, Fresnes, France

17 Apr, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், New Malden, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை தெற்கு, Thun, Switzerland

11 Apr, 2025
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Eastham, United Kingdom

15 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், ஆலங்குளாய், சண்டிலிப்பாய், Scarborough, Canada

11 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில் மேற்கு, பிரான்ஸ், France

12 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், கோப்பாய், Katunayake, Toronto, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, Brampton, Canada

17 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இளவாலை, தெஹிவளை

15 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், திருச்சி, India, Toronto, Canada

17 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epsom, United Kingdom

16 Apr, 2020
25ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Spiez, Switzerland

17 Apr, 2000
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US