வசந்த முதலிகே தடுத்து வைப்பு விவகாரம்! வேடுவ தலைவர் அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை
போராட்ட இயக்கத்தின் முன்னணி செயற்பாட்டாளரான வசந்த முதலிகே தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறித்து மீள்பரிசீலனை செய்யுமாறு வேடுவ சமூகத்தின் தலைவர் உரு வாரியே வன்னில அத்தோ கோரிக்கை விடுத்துள்ளார்.
தம்பன, கொட்டபாகினிய கிராமத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டு
போராட்ட இயக்கத்தில் ஈடுபட்ட இளைஞர்களை தடுத்து வைத்து உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்திரவதைக்கு உள்ளாக்குவது வருந்தத்தக்கது.
போராட்டக்காரர்கள் குற்றம் இழைத்திருந்தால், தகுந்த தண்டனையை வழங்குவது நியாயமானது. எனினும் அவர்களை நீண்ட காலம் தடுத்து வைத்து, உடல் மற்றும் மனரீதியான சித்திரவதைகளுக்கு உட்படுத்துவது பொருத்தமானதல்ல.
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை தாங்கியது தமது இனத்தின் தாய் ஒருவரின் மகன் எனவும், அவரின் விடுதலை தொடர்பில் மீள்பரிசீலனை செய்யுமாறும் தெரிவித்துள்ளார்.