இரும்பு வேலியினால் எங்களை அடக்க முடியாது: போராட்ட களத்தில் ஆவேசமடைந்த தமிழ் இளைஞர் (VIDEO)
இரும்பு வேலியினால் எங்களை அடக்க முடியாது எனவும்,கொள்ளையர்களை வீட்டிற்கு அனுப்பும் வரை எங்களது போராட்டம் முற்றுப்பெறாது எனவும் பல்கலைக்கழக மாணவரொருவர் போராட்டக்களத்தில் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள பகுதியில் அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தினர் இணைந்து பாரிய ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்து வருகின்றனர்.
இதன் காரணமாக நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டிருந்ததுடன்,இதனை கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர் புகைத் தாக்குதலையும் நடத்தியிருந்தனர்.
இதன்போது போராட்டத்தில் கலந்துக்கொண்ட பல்கலைக்கழக மாணவரொருவர் இரும்பு வேலியினால் எங்களை அடக்க முடியாது எனவும்,கொள்ளையர்களை வீட்டிற்கு அனுப்பும் வரை எங்களது போராட்டம் முற்றுப்பெறாது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும்,73 வருடங்களாக அபிவிருத்தியின்றி வாழும் எமது சமூகத்திற்காக நாங்கள் இவ்வாறு வீதியில் இறங்கி போராடுகின்றோம். எமது நாட்டினை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து பணத்தினை கொள்ளையடித்துவிட்டு எங்களை இவ்வாறு வீதியில் இறங்கி போராடும் நிலைக்கு தள்ளியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.







