அரசியல் கட்சிகளின் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு! கண்டனம் வெளியிட்டுள்ள மன்னிப்புசபை
இலங்கையில் தொழிற்சங்கங்கள், மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் இன்றைய போராட்டத்திற்கு இலங்கை பொலிஸார் அனுமதி மறுத்துள்ளமை கவலையளிப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.
அமைதியான முறையில் ஒன்றுகூடும் உரிமை போன்ற அடிப்படை மனித உரிமைகளைப் பயன்படுத்துவதற்கு, எதிர்ப்பாளர்கள் அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை.
சட்டபூர்வமான கட்டுப்பாடுகள்
இந்த நிலையில் பொலிஸாரை மேற்கோள்காட்டியுள்ள போராட்டத்திற்கு அனுமதி மறுப்பதற்கான காரணங்கள், சர்வதேச சட்டத்தின்படி அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கு எதிரான சட்டபூர்வமான கட்டுப்பாடுகள் அல்ல என்று சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
நகர்ப்புற இடங்கள் மக்கள் புழக்கத்திற்கான இடங்கள் மட்டுமல்ல, பங்கேற்பதற்கான இடங்களும் ஆகும். பல கூட்டங்கள், இயல்பிலேயே, சாதாரண வாழ்க்கை அல்லது மற்றவர்களின் உரிமைகளுக்கு ஒரு குறிப்பிட்ட அளவிலான இடையூறுகளை உள்ளடக்கியது என்பதை மன்னிப்புசபை குறிப்பிட்டுக்காட்டியுள்ளது.
இதேவேளை அமைதியான முறையில் ஒன்று கூடும் சுதந்திரம் என்பது ஒரு உரிமை, சலுகை
அல்ல. இந்த உரிமையை எளிதாக்குவதற்கு அதிகாரிகள் கடமைப்பட்டுள்ளனர் என்றும்
சர்வதேச மன்னிப்புசபை தெரிவித்துள்ளது.