நில அபகரிப்புக்கு எதிரான போராட்டத்திற்கு பொது அமைப்புக்கள் கூட்டாக அழைப்பு (VIDEO)

University of Jaffna Sri Lanka SL Protest
By Kajinthan Nov 01, 2022 08:32 PM GMT
Report

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நாளைய தினம் இடம்பெறவுள்ள வலி.வடக்கு மக்களின் காணி அபகரிப்புக்கெதிரான கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள்,

வலி.வடக்கு மக்களின் காணி அபகரிப்புக்கு எதிரான போராட்டத்திற்கான அழைப்பை யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் நேற்றைய தினம் விடுவித்திருந்தார்கள்.

அந்த வகையில், இங்கு நடைபெறுகின்ற காணி அபகரிப்பு எங்கள் தாயகத்தை கூறுபோடுகின்ற நிகழ்வுக்கு குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வலி வடக்கிலே காணிகளை அபகரித்து பொதுமக்களுடைய காணிகளை அபகரித்து அரச இயந்திரங்கள் தங்களுடைய செயற்பாடுகளுக்கு பயன்படுத்துகின்ற அந்த செயற்பாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


எமது தமிழ் மக்களின் ஒற்றுமை

அண்மையிலே யாழ்ப்பாண மாணவர் ஒன்றியம், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களையும் ஏனைய பல்கலைக்கழக வளாகங்கள் மற்றும் பீடங்களில் உள்ள தமிழ் மாணவர்களையும் ஒன்றிணைத்து வடக்கு, கிழக்கு மாணவர் ஒன்றியத்தை அங்குரார்ப்பணம் செய்திருந்தார்கள்.

அந்த விடயத்தை நாங்கள் சிவில் அமைப்புகள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். எங்களுடைய இளைய சமுதாய இளைஞர்களுடைய தமிழ் தேசிய போராட்டத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு இருக்கின்றது.

நில அபகரிப்புக்கு எதிரான போராட்டத்திற்கு பொது அமைப்புக்கள் கூட்டாக அழைப்பு (VIDEO) | Srilanka Protest Against Government

அந்த முயற்சியில் முதல் அடிக்கல்லாக இதை எடுத்திருப்பது வரவேற்கத்தக்க விடயம். அந்த அங்குரார்ப்பண நிகழ்வைத் தொடர்ந்து நாளைய தினம் இப்போராட்டத்திற்கு மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்திருப்பதும் இன்னும் வரவேற்கத்தக்க விடயம்.

அது மட்டுமல்லாமல் கிழக்கிலிருந்தும் இப்போராட்டத்திற்கு 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடவிருக்கின்றார்கள்.

இது எமது தமிழ் மக்களின் ஒற்றுமையை வெளிக்காட்டக் கூடியதாக உள்ளது. மேலும் இந்த ஊடக சந்திப்பில் கலந்துள்ள அனைத்து சிவில் அமைப்புகளும் இந்த போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை தெரிவிப்பதற்காக தான் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அந்த வகையிலே யாழ். மாவட்டத்தில் 3427 ஏக்கர் நிலம் அரசினுடைய இராணுவத்தினுடைய ஏனைய படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது.

1674 ஏக்கர் நிலம் சுவீகரிப்பு

குறிப்பாக வலி வடக்கில் 2467 ஏக்கர் நிலம் இந்த கட்டுப்பாட்டில் இருக்கின்றது. இவை அனைத்தும் விடுவிக்கப்பட வேண்டும்.மேலும் காணி அமைச்சினுடைய மேலதிக செயலாளர் தெல்லிப்பளை பிரதேச செயலாளர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்திலேயே 1674 ஏக்கர் நிலத்தை சுவீகரிப்பதற்கு உத்தரவிட்டிருக்கின்றார்.இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

எங்கள் வளங்கள் சுரண்டப்படுகின்றன. இலங்கை அரசினுடைய சிங்கள் பௌத்த பேரினவாத அரசு எங்களுடைய நிலத்தை பயன்படுத்தி தோட்டம் செய்வதாக இருக்கட்டும் எங்களுடைய கடல் வளத்தை சுரண்டி அவர்களின் பொருளாதாரத்தை வளர்க்கின்றனர்.

நில அபகரிப்புக்கு எதிரான போராட்டத்திற்கு பொது அமைப்புக்கள் கூட்டாக அழைப்பு (VIDEO) | Srilanka Protest Against Government

இது எமது நிலம் இதுவே எமது உரிமை என்று நாளைய தினம் போராட்டத்தை முன்னெடுக்கின்றோம். மேலும் தெல்லிப்பளை சந்தையில் நடக்கின்ற போராட்டத்திற்கு மக்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

காலநிலைக்கு அஞ்ச மாட்டோம். இதன் மூலம் தமிழ் தேசியத்தின் மேல் உள்ள பற்றை வழி காட்டவே வேண்டும் இதில் எந்த கட்சி தலையிலும் இல்லாமல் தமிழ் தேசியத்திற்காக அனைவரும் இப்போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் சார்பில் யாழ்.பல்கலைக்கழக மாணவருக்கு ஆதரவு வழங்கி இருக்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US