யாழ்.தொடக்கம் அம்பாந்தோட்டை வரை பயங்கரவாத தடுப்புச்சட்டத்துக்கு எதிரான கையெழுத்து போராட்டம்

Jaffna Sri Lanka Sri Lankan Peoples
By Rakesh Sep 09, 2022 09:38 PM GMT
Report

கொடூரமான பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்யக்கோரி நாடளாவிய ரீதியில் கையெழுத்துத் திரட்டும் பிரசார நடவடிக்கை யாழ். காங்கேசன்துறை தொடக்கம் அம்பாந்தோட்டை வரை நாடு முழுவதும் நடத்தப்படவுள்ளது.

நாளை ஆரம்பமாகும் இந்நிகழ்வில் திரண்டு பங்களிக்க மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

இதற்கான அழைப்பை இலங்கைத் தமிழரசுக் கட்சி வாலிபர் முன்னணியின் சார்பில் கி. சேயோன், சர்வ ஜன நீதி அமைப்பின் சார்பில் ம.ஆ.சுமந்திரன் எம்.பி., தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் கூட்டமைப்பு சார்பில் ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ளனர்.

யாழ்.தொடக்கம் அம்பாந்தோட்டை வரை பயங்கரவாத தடுப்புச்சட்டத்துக்கு எதிரான கையெழுத்து போராட்டம் | Srilanka Protest Against Government

இதையொட்டி அவர்கள் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"1979 ஆம் ஆண்டு, 6 மாதங்களுக்கு ஒரு தற்காலிக ஏற்பாடுகள் சட்டமாககே கொண்டுவரப்பட்டு, 40 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்தும் நடைமுறையிலுள்ள கொடூரமான பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் கையெழுத்துத் திரட்டும் பிரசார நடவடிக்கையை நாம் ஆரம்பித்துள்ளோம்.

அரசுக்கு எதிரான அதிருப்தி

அன்றைய அரசுக்கு எதிரான அதிருப்தியை நசுக்குவதற்கு இந்தச் சட்டம் பயன்படுத்தப்பட்டதை நாம் கண்டோம். இது கடந்த காலங்களில் தொடர்ந்ததைப் போலவே இன்றும் தொடர்கின்றது.

யாழ்.தொடக்கம் அம்பாந்தோட்டை வரை பயங்கரவாத தடுப்புச்சட்டத்துக்கு எதிரான கையெழுத்து போராட்டம் | Srilanka Protest Against Government

குறிப்பாக தற்போது காலிமுகத்திடல் அஹிம்சை வழிப் போராட்டக்காரர்களைக் கைதுசெய்யவும் இந்தச் சட்டமே பயன்படுத்தப்படுகின்றது. இதற்கு எதிரான கையெழுத்துத் திரட்டும் பிரசார நடவடிக்கை நாளை (10.09.2022) காலை 9 மணிக்கு யாழ். மாவிட்டபுரம் கந்தசாமி கோயிலிலிருந்து ஆரம்பமாகும்.

காங்கேசன்துறை தொடக்கம் அம்பாந்தோட்டை வரையாக நடைபெறவுள்ள நாடு தழுவிய இந்த ஊர்தி வழிப் போராட்டம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டதை இரத்துச் செய்வதாக அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி வலியுறுத்தும்.

நாளை ஆரம்ப நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். தயவாக எங்களுடன் சேர்ந்து, இந்தப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான மனுவில் கையெழுத்திடுங்கள்" - என்றுள்ளது.

8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US