எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதும் கோட்டாபய வந்ததால் நேர்ந்த கதி (VIDEO)
அரசியல் அனுபவமே இல்லாத கோட்டாபய ராஜபக்ச அரசியலுக்குள் நுழைந்தால் நாடு கடும் பின்னடைவை எதிர்நோக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதும் அவரை ஜனாதிபதியாக கொண்டு வந்தமையே தற்போதைய நெருக்கடிக்கு காரணம் என முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
மேலும்,கோட்டாபய ராஜபக்ச ஜனாதியாக பதவியேற்றால் மக்கள் பெரும் ஆபத்தை எதிர்நோக்க நேரிடும் என முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், அவை அனைத்தும் நிகழ்ந்ததாகவும்,பின்னர் சிங்கள மக்களினாலேயே வெறுத்து ஒதுக்கப்பட்டு நாட்டை விட்டு வெளியேற முடியாத நிலையை எதிர்நோக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,