ஜனாதிபதி மாளிகை முற்றுகை! பட்டாசு கொளுத்தி கொண்டாடிய மக்கள் (VIDEO)
ஜனாதிபதி மாளிகைக்கு திரண்ட மக்களின் போராட்ட வெற்றிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் முல்லைத்தீவு மக்கள் பட்டாசு கொளுத்தி கொண்டாடியுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை,புதுக்குடியிருப்பு போன்ற பிரதேசங்களில் மக்கள் பட்டாசு கொளுத்தி கொண்டாடியுள்ளனர்.
இதன்போது சமூக செயற்பாட்டாளர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,
பேசுபொருளாக மாறியுள்ள விடயம்
இலங்கை நாட்டில் அதிகப்படியான 69 இலட்சம் மக்களின் வாக்குகளை பெற்ற ஜனாதிபதி அதே மக்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளார்க. இன்று பேசுபொருளாக அனைத்து மக்களிடமும் இந்த போராட்டம் காணப்படுகின்றது.
இலங்கை நாட்டில் மக்கள் இறுக்கமான பொருளாதார நெருக்கடியிலும் மக்கள் வீறுகொண்டு எழுந்து ஜனாதிபதியையும்,பிரதமரையும் பதவி விலகுமாறு கோரியுள்ளனர்.மக்களின் எழுச்சியின் வடிவம் ஒரு மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.
போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மக்கள் ஆதரவினை கொடுத்துள்ளதுடன்,வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.