அப்பாவி மக்களின் உயிர்கள் பறிபோகும் நிலை: தனியார் வைத்தியசாலைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
பாரிய மருந்து தட்டுப்பாடு காரணமாக தனியார் வைத்தியசாலை மற்றும் நேர்சிங் ஹோம் சங்கம் முக்கிய முடிவொன்றை எடுத்துள்ளது.
அதன்படி அவசர சத்திர சிகிச்சைகளை மாத்திரம் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தனியார் வைத்தியசாலை மற்றும் நேர்சிங் ஹோம் சங்கத்தின் தலைவர் கலாநிதி ஆனந்த குருப்பு ஆராச்சி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில்,
நாடளாவிய ரீதியிலுள்ள 200 தனியார் வைத்தியசாலைகளில் 76 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு காணப்படுகிறது.
மருந்துகள் மற்றும் சத்திர சிகிச்சை உபகரணங்கள் தட்டுபாடு குறித்து சுகாதார அமைச்சு மற்றும் தனியார் சுகாதார சேவை ஒழுங்குப்படுத்தும் சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே நாளுக்கு நாள் நாட்டில் அதிகரித்துச் செல்லும் மருந்துகளுக்கான பற்றாக்குறை காரணமாக அப்பாவி மக்களின் உயிர்கள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் மருந்துகள் மற்றும் வைத்திய உபகரணங்கள் என்பவற்றை இலங்கைக்கு நன்கொடையாக வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.



திருமணத்திற்கு 1 மாதம் முன் தெரியவந்த அதிர்ச்சி விஷயம்.. முதல் மனைவி பற்றி விஷ்ணு விஷால் எமோஷ்னல் Cineulagam

43 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் அனுஷ்கா.. காதலனை பற்றி முதல் முறையாக கூறிய நடிகை Cineulagam

கடலுக்கு அடியில் மிகப்பெரிய ஜாக்பாட்டை கண்டுபிடித்த இந்தியாவின் நட்பு நாடு.., ஆனால் ஒரு சிக்கல் News Lankasri
