இந்தியாவின் உதவியை நாடும் ரணில்!இதுதான் காரணம்: செய்திகளின் தொகுப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொள்கை சீர்திருத்தங்கள், நிர்வாகம், திறன் மேம்பாடு, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் பொதுச் சேவை வழங்கல் ஆகியவற்றிற்கு இந்தியாவின் உதவியை நாடுவதாக தொழிலாளர், மக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நல்லாட்சிக்கான தேசிய மையத்தின் (NCGG) பணிப்பாளர் நாயகம் தலைமையிலான இந்தியக் குழுவின் இரண்டு நாள் விஜயத்தின் போது, கடந்த 1 ஆம் திகதி நல்லாட்சிக்கான தேசிய மையத்தின் (NCGG) பணிப்பாளர் நாயகம் பாரத்லால் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, அண்மைய பொருளாதார சவால்களை எதிர்கொள்வது மற்றும் நாட்டை உயர் பொருளாதார வளர்ச்சியின் பாதையில் கொண்டு செல்வதற்கான மூலோபாயம் குறித்தும், இலங்கைக்கான தனது தொலைநோக்குப் பார்வை குறித்தும் ஜனாதிபதி பகிர்ந்து கொண்டுள்ளார்.
இதன்போதுஜனாதிபதி, இலங்கையில் ஆளுகை மற்றும் பொதுக் கொள்கைக்கான பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு NCGG உதவ வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான செய்திகளின் தொகுப்பு,
மயிலுக்காக கோமதியிடம் பேசிய மீனாவிற்கு ஏற்பட்ட நிலைமை, லஞ்சம் வாங்கிய செந்தில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam