நாளைய மின்வெட்டு நேரத்தில் மாற்றம் (PHOTOS)
அனல் மின் நிலையங்களுக்கு தேவையான எரிபொருளை வழங்குவதற்கு இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் வாக்குறுதி வழங்கியுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன் காரணமாக நாளைய தினம் திட்டமிடப்பட்டிருந்த மின்வெட்டு 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களாக குறைக்கப்படும் எனவும் குறித்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு அதன் தலைவர் இதனைத் தெரிவித்தார்.
இரண்டாம் இணைப்பு
எதிர்வரும் நாட்களில் சுழற்சி முறையில் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில், மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய, நாளைய தினம் நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 4 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதிக்குள் 3 மணித்தியாலங்களும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதிக்குள் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் துண்டிப்பு அமுலாகவுள்ளது.
அதேபோல், 19 மற்றும் 20ஆம் திகதிகளிலும் நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 4 மணித்தியாலங்களும் 50 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W வலயங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையும் மற்றும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை 3 மணி 20 நிமிடங்கள் வரை மின்வெட்டினை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.







அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri
