மின்சார தடையை நீடிக்க வேண்டிய அவசியமில்லை! வெளியான தகவல்
எதிர்வரும் ஜனவரி மாதம் வரை மின்சாரத் தடையை நீடிக்க வேண்டிய அவசியமில்லை என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றில் உரையாற்றிய ஜனக ரத்நாயக்க, நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தில் அண்மையில் பழுதடைந்த இரண்டு மின் உற்பத்தி அலகுகளும் அடுத்த இரண்டு வாரங்களில் மீண்டும் தேசிய மின்னோட்டத்துடன் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
"அக்டோபர் இறுதிக்குள் நிலக்கரி கையிருப்பு தீர்ந்துவிட்டால், மின்வெட்டை நீடிக்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம், ஆனால் நிலக்கரி கொள்முதல் சாத்தியம் என்பதை இப்போது காண்கின்றோம்.
மின் உற்பத்தி
இலங்கையில் தற்போது தினசரி இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் மின்சாரம் தடைப்படுகின்றது.
இந்த நிலையில், நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் உள்ள 3 ஆவது அலகு பழுதுபார்க்கப்பட்ட பின்னர் எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் மீண்டும் தேசிய மின்தொகுப்புடன் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
பராமரிப்புக்காக
அதன் செயற்பாடுகளை இடைநிறுத்தியுள்ள மற்றைய மின் உற்பத்தி அலகும், அடுத்த
வாரத்திற்குள் மீண்டும் தேசிய மின்னோட்டத்துடன் இணைக்கப்படும் என ரத்நாயக்க
மேலும் தெரிவித்துள்ளார்.