வார இறுதியில் மின்வெட்டு! வெளியானது அறிவிப்பு
வார இறுதியில் மின்வெட்டை நடைமுறைப்படுத்துவதற்கு மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய, வார இறுதியில் (9, 10) மின்துண்டிப்பை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் சனிக்கிழமை A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு மாலை 3 மணிமுதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதியினுள் சுழற்சி முறையில் 2 மணிநேரம் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
அவ்வாறே P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு மாலை 3 மணிமுதல் இரவு 10 மணிவரையான காலப்பகுதியினுள் 2 மணித்தியாலங்களும் மின்வெட்டினை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(10) A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு மாலை 6 மணிமுதல் இரவு 10 மணிவரையான காலப்பகுதியினுள் 1 மணித்தியாலம் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
அதற்கமைய P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கும் மாலை 6 மணிமுதல் இரவு 10 மணிவரையான காலப்பகுதியினுள் 1 மணித்தியாலம் மின்வெட்டினை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri