கோட்டாபயவின் அரசியல் வியூகங்களை பின்பற்றுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை
இராஜாங்க அமைச்சர்களை நியமிக்கும் போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச போன்று தங்களுக்கு சொந்தமான நிறுவனங்களையும் நோக்கங்களையும் வர்த்தமானியில் வெளியிட்டு நியமிக்குமாறு முன்னாள் அமைச்சர்கள் குழுவொன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்மூலம் அமைச்சரவை அமைச்சர்களுக்கும் இராஜாங்க அமைச்சர்களுக்கும் இடையில் ஏற்படக்கூடிய முரண்பாடுகள் பெருமளவில் குறைக்கப்படும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரியவருகின்றது.

முப்பது இராஜாங்க அமைச்சர் நியமனம்
முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் குழுவொன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து இவ்விடயம் தொடர்பில் தமது கருத்துக்களை முன்வைத்துள்ளதாக அறியமுடிகின்றது.

இது தொடர்பில் ஜனாதிபதியிடமிருந்து பதில் எதுவும் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் முப்பது இராஜாங்க அமைச்சர்களை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும், இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றியதன் பின்னர் அந்த நியமனங்கள் வழங்கப்படும் எனவும் அறியமுடிகின்றது.
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan