ஐ.மக்கள் சக்தியின் 5 பேருக்கு அமைச்சு பதவிகள்
ஐக்கிய மக்கள் சக்தியின் 5 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவிகள் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று அரசாங்கத்தில் இணையும் 5 பேர்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்த அழைப்பை ஏற்று இவர்கள் அமைச்சரவையில் இணைந்துக்கொள்ள உள்ளனர்.
இவர்கள் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் முக்கிய அமைச்சு பதவிகளை வகித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் என தெரியவருகிறது.
சர்வக்கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் கூடிய தேசிய அரசாங்கம்
சர்வக்கட்சி அரசாங்கத்திற்கு பதிலாக சர்வக்கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் கூடிய தேசிய அரசாங்கத்தை அமைக்க அரசாங்கம் தயாராகி வருகிறது.
இதனடிப்படையில், கட்சிகளாக அல்லாமல் தனித்தனி நாடாளுமன்ற உறுப்பினர்களாக சில கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்ள உள்ளனர்.
அடுத்த சில தினங்களில் புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.