இலங்கை வந்த அமெரிக்காவின் முக்கிய புள்ளி! புலனாய்வு பிரிவில் ரணிலின் முக்கிய வியூகம்(Video)
இலங்கை புலனாய்வு பிரிவு தற்போது ஜனாதிபதி செயலகத்தின் நேரடி கட்டுபாட்டிற்கு கீழ் உள்ளது என பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,“அண்மையில் அமெரிக்காவின் புலனாய்வு துறை தலைவர் வில்லியம் பேர்ன்ஸ் இலங்கை வந்து சென்றிருந்தார். அதன் பின்னர் இலங்கை அரசு மேற்குலக புலனாய்வு துறையுடனும் இணைந்து இயங்குகின்றது.
இலங்கையில் இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பான தகவல் உடனுக்குடன் மேற்குலகத்திற்கு பரிமாறப்படுகின்றது.
அதுமட்டுமல்லாது மேற்குலக நாடுகளை பொறுத்தவரையில் அவர்களின் புலனாய்வு துறையையும் இலங்கை உள்வாங்கி செயற்படுவதாக பார்க்கபடுகின்றது.
இதேவேளை இந்தியாவின் செயற்பாட்டை பார்த்தோமானால், அதன் வடக்கிலும் கிழக்கிலும் ஒரு பதற்றமான சூழல் தான் காணபடுகின்றது.
அதாவது இலங்கை அரசை இந்தியாவால் கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலையை அவர்கள் உணர்ந்துகொண்டிருப்பது தெரிகின்றது. அதில் இலங்கையின் புலனாய்வு துறை ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றது.
இலங்கையின் புலனாய்வு துறை மேற்குலக நாடுகளின் கட்டுப்பாட்டில் இருப்பதனால் இந்தியாவின் நடவடிக்கையை இலகுவாக அவதானிக்க முடியும்.”என கூறியுள்ளார்.





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 16 மணி நேரம் முன்

பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அங்கீகாரம்: பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் இன்று முக்கிய அறிவிப்பு News Lankasri

இரண்டு நாட்களில் விஜய் ஆண்டனியின் சக்தி திருமகன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
