இலங்கையில் ஆரம்பிக்கப்பட வேண்டிய இலகு தொடருந்து சேவை பங்களாதேஷில் ஆரம்பம்
இலங்கையில் ஆரம்பிக்கப்பட வேண்டிய இலகு தொடருந்து சேவையானது பங்காளதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனாவினால் அந்நாட்டின் முதல் மெட்ரோ தொடருந்து சேவையாக டாக்காவில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இலங்கையில் 2016ம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தில் இதற்கான திட்டம் வகுக்கப்பட்டது. இதன்படி 2019இல் ஆரம்பிக்கப்பட்டு 2024ஆம் ஆண்டு முடிவடையும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டன. எனினும் 2019இல் ஆட்சிக்கு வந்த கோட்டாபய ராஜபக்ச இந்த திட்டத்தை இரத்துச் செய்தார்.
நகர இலகு தொடருந்து சேவை
இந்த பணி முன்னெடுக்கப்பட்டிருந்தால் 16 நிலையங்கள் ஊடாக நீர்கொழும்பு, கண்டி, கடுவெல, மாலபே, கொட்டாவை, பிலியந்தலை மற்றும் மொரட்டுவை ஆகிய ஏழு வழித்தடங்களில் மாலபே பாதையையும் இணைத்து நகர இலகு தொடரூந்து சேவையை ஆரம்பித்திருக்க முடியும்.
இதனால், பெருமளவில் போக்குவரத்து பிரச்சினையை தீர்க்கமுடிந்திருக்கும். எனினும் ராஜபக்சர்கள் இதனை இரத்துச் செய்தனர்.
ஜப்பான் நிதி உதவி
பங்களாதேஷிற்கான ஜப்பானிய தூதுவர் மற்றும் இலங்கையில் மாலபே எல்ஆர்டி
திட்டத்திற்கு அனுசரணை வழங்கும் அதே முகவரான ஜப்பான் சர்வதேச கூட்டுறவு
நிறுவனத்தின் பிரதிநிதியும் விழாவில் கலந்துகொண்டனர்.
இந்த திட்டம் பெரும்பாலும் ஜப்பானால் நிதியளிக்கப்பட்டது. பங்களாதேஷ் பிரதமர் இதனை பங்களாதேஷ் மக்களுக்கும் பங்காளதேஷின் வளர்ச்சிக்கு மற்றும் ஒரு படி என்று குறிப்பிட்டார்.
இதன் மூலம் டாக்காவின் பாரிய போக்குவரத்து பிரச்சினையை தீர்க்க முடியும் என்று
நம்பப்படுகிறது.

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை? News Lankasri

viral video: ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புக்கு அருகில் அசால்ட்டாக சாக்லேட் சாப்பிடும் குழந்தை! Manithan

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri
