சர்வதேசத்தில் அநாதையாக்கப்படும் இலங்கை! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை (video)
இந்த ஆட்சி நீடித்தால் ஜெனிவாவில், இலங்கைக்கு எந்தவொரு நாடும் ஆதரவு வழங்க முன்வராது என நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை குறித்த பிரேரணை, நாளை வாக்கெடுப்பிற்கு விடப்பட்டால் வாக்களிக்க தகுதியுள்ள 47 நாடுகளில் ஆறு நாடுகள் மாத்திரமே தமக்கு ஆதரவாக அதாவது குறித்த பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கும் என்று இலங்கை அரசாங்கம் அச்சம் கொண்டுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.
நான் இலங்கை பிரஜை என்ற ரீதியில் எமது நாட்டுக்கு ஆதரவாகவே இருப்பேன். இலங்கை மீதான சர்வதேச பொறிமுறையை ஒருபோதும் ஆதரிக்கமாட்டேன்.
உள்நாட்டு பிரச்சினைகளுக்கு உள்ளக பொறிமுறையூடாகவே தீர்வு காண வேண்டும். நான் வெளிவிவகார அமைச்சராக இருந்த காலங்களில் ஜெனிவா விவகாரங்களை நாட்டுக்கு ஆபத்து ஏற்படாதவாறும், நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படாதவாறும் சாதுரியமாக கையாண்டேன்.
ஆனால், தற்போது நிலைமை எல்லை மீறிப் போகின்றது போல் தெரிகின்றது. இந்த ஆட்சி நீடித்தால் ஜெனிவாவில் இலங்கைக்கு 6 நாடுகள் மட்டுமல்ல எந்தவொரு நாடும் ஆதரவு வழங்க முன்வராது. சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பின்றி இலங்கை அநாதையாகும் நிலையே ஏற்படும்.
எனவே ஜனநாயக வழியில் இந்த ஆட்சியை நாம் கவிழ்த்தே தீர வேண்டும். நாட்டின் மீது பற்றுள்ள அனைவரும் இந்த நடவடிக்கைக்காக ஓரணியில் திரள வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான செய்திகளின் தொகுப்பு,
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri
யாரிந்த பீற்றர் எல்பர்ஸ்... IndiGo தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு News Lankasri
ட்ரம்பின் மிகப்பெரிய திட்டம்... ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து நான்கு நாடுகளை குறிவைக்கும் அமெரிக்கா News Lankasri