கொழும்பில் ஜனாதிபதியுடன் முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ள எதிர்கட்சிகள்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர் கட்சித் தலைவர்களை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கலந்துரையாடல் தற்போது கொழும்பு – வோட் பிளேஸில் நடைபெற்று வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்கட்சி தலைவர்களை சந்தித்த பின்னர் ஜனாதிபதி அங்கிருந்து வெளியேறியுள்ள நிலையில், எதிர்கட்சிகள் தொடர்ந்தும் கலந்துரையாடல்களை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
உத்தேச உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டம்
இந்த கலந்துரையாடலில் தமிழ் கட்சிகளும் கலந்துக்கொண்டுள்ளதாக தெரிய வருகின்றது.
இதன்போது உத்தேச உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், இதற்கு முன்னர் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நேற்று (27) கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதிலும், வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





இந்த நடிகரை உங்களுக்கு நினைவு இருக்கா? பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார்! இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam
