கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தால் கிடப்பில் போடப்பட்ட இலகு ரயில் போக்குவரத்து திட்டம்
கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தால் கிடப்பில் போடப்பட்ட அல்லது கைவிடப்பட்ட ஜப்பானிய நிதியுதவியுடன் கூடிய இலகு ரயில் போக்குவரத்துத் திட்டம் மற்றும் 12 திட்டங்களை புத்துயிர் பெறுவது குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடவுள்ளார்.
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக அவர் ஜப்பானுக்கு இன்று புறப்படுகின்றார்.
இந்த நிலையில் தற்போதைய பிரதமர் ஃபுமியோ கிஷிடா, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு அமைப்பின் (JICA) தலைவர் சம்பந்தப்பட்ட அமைச்சரவை அமைச்சர்களை அவர், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சந்திக்கின்றார்.

மின் உற்பத்தி நிலையத்திட்டம்
ஜனாதிபதியின் விஜயத்தின் போது, கொழும்பு துறைமுக மேற்கு கொள்கலன் முனைய அபிவிருத்தி மற்றும் இயற்கை மின் உற்பத்தி நிலையத் திட்டம் குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளது.
கடந்த காலங்களில் பின்தங்கியிருந்த வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஜப்பானில் இருந்து இலங்கைக்கு ஈர்ப்பதற்கான வழிமுறைகளும் , ஜனாதிபதியால் ஆராயப்படவுள்ளன.

உலக உணவுத்திட்டம், யுனிசெஃப் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றின் மூலம் 6.5 மில்லியன் அமெரிக்க டொலர் அளவுக்கு உணவு ஊட்டச்சத்து, சுகாதாரம் மற்றும் சுகாதாரத்திற்காக ஜப்பான் இந்த ஆண்டு இரண்டு கட்டங்களில் அவசர மனிதாபிமான உதவியை வழங்கியுள்ளது.
பொருளாதார வீழ்ச்சி
இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதியமைச்சர் என்ற வகையில் எதிர்வரும் வியாழன் அன்று 55 ஆவது ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்தக் கூட்டத்திற்குத் தலைமை தாங்குவதற்காக மணிலாவிற்குச் செல்லவுள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியை நிவர்த்தி செய்வதற்கு இலங்கைக்கு மேலும் உதவியை பெறுவது தொடர்பில் ஜனாதிபதி விக்ரமசிங்க ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவருடன் கலந்துரையாடவுள்ளார்.
இந்த பயணத்தின் போது பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி போங்பாங் மார்கோசையும் அவர்
சந்திக்கவுள்ளார்.
குணசேகரன் செய்த விஷயத்தால் பெண்கள் உச்சக்கட்ட அதிர்ச்சி.. எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam
விருந்தில் ஏற்பட்ட சண்டை.. வெளிவந்த உண்மையால் கோபத்தில் பாண்டியன்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ வீடியோ Cineulagam