திருக்கோணேஸ்வரம் மற்றும் குருந்தூர் மலை விவகாரம்: ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதி
"இலங்கை ஜனநாயக நாடு. இங்கு வாழும் சகல இனத்தவர்களுக்கும், அனைத்து மதத்தவர்களுக்கும் சம உரிமைகள் கிடைத்தே ஆக வேண்டும். எனவே, நாட்டில் இன ரீதியில், மத ரீதியில் எழுந்துள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் சகல தரப்பினருடனும் சுமுகமாக பேசி விரைவில் தீர்வு காண்போம்." என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
குருந்தூர் மலை விவகாரம்
குருந்தூர் மலை விவகாரம் மற்றும் திருக்கோணேஸ்வரம் விவகாரம் தொடர்பில் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் சிங்கள அரசியல்வாதிகளுக்கும் இடையில் எழுந்துள்ள கருத்து மோதல்கள் தொடர்பில் கருத்துரைக்கும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில் "இனவாத, மதவாத ரீதியில் கருத்துக்களை வெளியிடுவோர் நாட்டின் இன நல்லிணக்கத்தையும் மத நல்லிணக்கத்தையும் கவனத்தில்கொள்ள வேண்டும். ஒவ்வொரு இனத்தவர்களும் தங்களுக்குரிய முழுமையான உரிமைகளைக் கோரி நிற்பார்கள்.
பேச்சு மூலமான தீர்வு
அதேவேளை, ஒவ்வொரு மதத்தவர்களும் தங்கள் மத உரிமைகளை விட்டுக்கொடுக்கமாட்டார்கள். எனவே, இன, மத ரீதியில் எழும் பிரச்சினைகளுக்குப் பேச்சு மூலமே தீர்வுகாண வேண்டும்.
அதைவிடுத்து இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டும் வகையில்
கருத்துக்களை வெளியிட்டு பிரச்சினைகளை பெரிதுபடுத்த எந்த தரப்பினரும்
முயற்சி செய்யக்கூடாது" என கூறியுள்ளார்.

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
