ராஜபக்ச குடும்பத்திற்குள் கடும் மோதல்! மகிந்தவை மறைமுகமாக புறக்கணிக்கும் மனைவி மற்றும் பிள்ளைகள்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக்கும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக பொதுஜன பெரமுன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மகிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக நியமிக்கும் நடவடிக்கையின் முதல் கூட்டம் மொனராகலினில் நடத்த தீர்மானிக்கப்பட்டதாகவும், கூட்டத்தின் ஏற்பாடுகளை ராஜபக்ச குடும்பத்தின் முன்னணி பிரதிநிதியான ஷசீந்திர ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எவ்வாறாயினும், ராஜபக்ச குடும்பத்தின் அடுத்த அரசியல் பலமான நபரை நியமிக்கும் நோக்கத்தில் பசில் ராஜபக்சவினால் ஷசீந்திர ராஜபக்சவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், ஷிரந்தி ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்சவுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக்க அதிக ஆர்வம் இல்லை எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாமல் ராஜபக்சவின் எதிர்கால அரசியல்
ராஜபக்ச குடும்பத்தின் அடுத்த அரசியல் பலமான நாமல் ராஜபக்சவை நியமிப்பதே ஷிரந்தி ராஜபக்சவின் இலக்காக உள்ளதாக அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பணியை வெற்றிகரமாக முடித்த ஷசீந்திர, கடந்த வாரம் மொனராகலை பேரணிக்கு பெருமளவான மக்களை வரவழைத்து, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக நியமிக்கும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்நிகழ்வில் மகிந்த ராஜபக்ச கலந்துகொண்ட போதிலும் நாமல் ராஜபக்ச கலந்து கொள்ளவில்லை எனவும், இந்த மொனராகலை பேரணியின் ஊடாக ராஜபக்ச குடும்பத்துக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி மீண்டுமொருமுறை வெளியில் கசிந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
