சர்ச்சையை கிளப்பிய பண்டோரா ஆவணங்கள்! இலங்கையில் நடந்தது என்ன...!

Gotabaya Rajapaksa Mrs Nirupama Rajapaksa Sri Lanka Economic Crisis Sri Lanka Sri Lankan political crisis
By Dhayani Sep 21, 2022 12:19 AM GMT
Report

பண்டோரா ஆவணம் மூலம் வெளியாகியுள்ள நிதி மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளின் வெளிப்படைத்தன்மைக்காக அமைக்கப்பட்ட சர்வதேச அமைப்பு, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

பண்டோரா ஆவணங்களில் வெளிப்படுத்தப்பட்ட சொத்துக்கள் ஏற்கனவே வெளிப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை தீர்மானிக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரத்தை கடிதம் மீண்டும் வலியுறுத்துவதாக டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா தெரிவித்துள்ளது.

"பண்டோரா ஆவணங்கள் வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா, முன்னாள் பிரதி அமைச்சர் நிருபமா ராஜபக்ச, அவரது கணவர் மற்றும் முன்னாள் அரச அதிகாரி ஆர். பாஸ்கரலிங்கம் ஆகியோரின் சொத்துக்கள் தொடர்பாக இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் 2 முறைப்பாடுகள் அண்மையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சர்ச்சையை கிளப்பிய பண்டோரா ஆவணங்கள்! இலங்கையில் நடந்தது என்ன...! | Srilanka Political Crisis Pandora Documents

சொத்து பிரகடனங்கங்கள் வெளிப்படுத்தப்படாமை

" குறித்த நபர்களின் சொத்துப் பிரகடனங்களை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அழைத்துப் பரிசோதித்திருந்தால் அது தொடர்பில் அறிவிக்குமாறு ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா சமீபத்திய கடிதத்தில் கோரியுள்ளது.

சொத்துக்கள் வேண்டுமென்றே குறிப்பிடப்படவில்லையா என்பதைப் புரிந்துகொள்வதற்கு இந்தத் தகவல் இன்றியமையாதது எனவும் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா மேலும் கூறியுள்ளது.

கடந்த வருடம், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உறவினர் மற்றும் நிருபமா ராஜபக்சவின் கணவர் மீதான நிதி மோசடி குற்றச்சாட்டுகளை விசாரித்து ஒரு மாத காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோட்டாபய ராஜபக்சவின் பணிப்புரையை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நிறைவேற்றவில்லை என கூறப்படுகின்றது.

சர்ச்சையை கிளப்பிய பண்டோரா ஆவணங்கள்! இலங்கையில் நடந்தது என்ன...! | Srilanka Political Crisis Pandora Documents

முன்னாள் ஜனாதிபதியும் பிரதமரின் உறவினருமான நிருபமா ராஜபக்சவும் அவரது கணவர் திருக்குமார் நடேசனும் போலி நிறுவனம் ஒன்றின் மூலம் குவிக்கப்பட்ட சொத்துக்களை மிக ஆடம்பரமான வாழ்க்கை வாழ பயன்படுத்தியதாக உலகின் மிகப்பெரிய ஊடக விசாரணையின் பின்னர் இலங்கையர்கள் பண்டோரா ஆவணங்களில் வெளிப்படுத்தியுள்ளனர்.

இதற்கமைய, விசாரணை நடத்தப்பட்டதோடு, ஒரு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு பிறப்பித்த உத்தரவு

ஜனாதிபதியின் சட்டப் பணிப்பாளர் நாயகம் ஹரிகுப்த ரோஹணதீர 2021ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 6 ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அந்த அறிவித்தலுக்குப் பின்னர் திருக்குமார் நடேசன் இரண்டு முறையாவது ஆணைக்குழு முன் அழைக்கப்பட்டார். ஜனாதிபதியின் உத்தரவுக்கு ஒரு மாதத்தின் பின்னர், ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் டபிள்யூ.கே.டி.விஜேரத்ன நவம்பர் 8, 2021 அன்று அறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார்.

சர்ச்சையை கிளப்பிய பண்டோரா ஆவணங்கள்! இலங்கையில் நடந்தது என்ன...! | Srilanka Political Crisis Pandora Documents

இது தொடர்பான விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்திருந்தது. இறுதி அறிக்கைக்கான திகதியை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அறிவித்துள்ளதாக குறிப்பிடப்படவில்லை.

“திருக்குமார் நடேசனின் வங்கிக் கணக்கு விபரங்கள் அடங்கிய அறிக்கைகள் பல்வேறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் வரவழைக்கப்பட்டு அறிக்கைகள் தற்போது கிடைத்து வருவதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்திருந்தார்.

ஆவணம் தொடர்பான இறுதி அறிக்கை

விசாரணைகள் நிறைவடையாததால், அறிக்கைகள் மற்றும் ஏனைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு இறுதி அறிக்கை வழங்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நவம்பர் 2021 ஆரம்பத்தில் விசாரணைகள் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக ஆணைக்குழுவின் செயலாளர் அப்சரா கல்தேரா ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

சர்ச்சையை கிளப்பிய பண்டோரா ஆவணங்கள்! இலங்கையில் நடந்தது என்ன...! | Srilanka Political Crisis Pandora Documents

பண்டோரா ஆவணம் என அழைக்கப்படும் சுமார் ஒரு கோடியே 20 ஆயிரத்திற்கும் அதிக ஆவணங்களின் தரவுத்தளமானது வொஷிங்டனை தளமாகக் கொண்ட சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்களின் கூட்டமைப்பால் (International Consortium of Investigative Journalists) வெளியிடப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசகராக இருந்த பிரித்தானிய குடியிருப்பாளர் இராமலிங்கம் பாஸ்கரலிங்கம், நவம்பர் 2021 தொடக்கத்தில் ICIJ ஆல் நிதி மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளானார்.

பில்லியன் கணக்கான டொலர்கள் முதலீடு

மாலபேயில் உள்ள HCBT எனப்படும் Horizon College of Business Technology தனியார் பல்கலைக்கழகத்தில் முதலீடு செய்வதற்கும் பிரிட்டனில் சொத்துக்களை வாங்குவதற்கும் அவர் பிரித்தானியாவின் விர்ஜின் தீவுகளில் அவர் நிறுவிய அறக்கட்டளைகள் மற்றும் நிறுவனங்களில் பில்லியன் கணக்கான டொலர்களைப் பயன்படுத்தியதாக பண்டோரா ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

சர்ச்சையை கிளப்பிய பண்டோரா ஆவணங்கள்! இலங்கையில் நடந்தது என்ன...! | Srilanka Political Crisis Pandora Documents

பாஸ்கரலிங்கம் 2008 ஆம் ஆண்டு எந்த அரசாங்க பதவியையும் வகிக்காமல், "தனது சொந்த செல்வத்தைப் பயன்படுத்தி" கல்லூரியை நிறுவியதாக, HCBT தலைவர் உபுல் தரனாகம ICIJ இடம் தெரிவித்தார்.

ராமலிங்கம் பாஸ்கரலிங்கம் மீதான நிதி மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளுக்கு அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை என ICIJ தெரிவித்துள்ளது.

117 நாடுகளை சேர்ந்த 600ற்கும் மேற்பட்டவர்கள் கண்டுபிடிப்பு

ஜனாதிபதிகளான ரணசிங்க பிரேமதாச, டிங்கிரி பண்டா விஜேதுங்க மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் ஆலோசகர் பதவிகளை வகித்த பாஸ்கரலிங்கம் தொடர்பில் பண்டோரா பத்திரிக்கைகளில் வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்வதாக தெரியவில்லை.

சர்ச்சையை கிளப்பிய பண்டோரா ஆவணங்கள்! இலங்கையில் நடந்தது என்ன...! | Srilanka Political Crisis Pandora Documents

117 நாடுகளைச் சேர்ந்த 600ற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் 90 அரச தலைவர்கள், உலகின் பணக்காரர்கள் மற்றும் அதிகாரப் படைத்தவர்கள் உட்பட 300ற்கும் மேற்பட்டவர்களின் நிதி பரிவர்த்தனைகளை ஆய்வு செய்துள்ளனர்.

நிருபமா ராஜபக்சவும் அவரது கணவர் திருக்குமார் நடேசனும் போலி நிறுவனம் ஒன்றின் மூலம் குவிக்கப்பட்ட செல்வத்தை மிகவும் ஆடம்பரமான வாழ்க்கைக்கு பயன்படுத்தியுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Frauenfeld, Switzerland

12 Oct, 2025
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Toronto, Canada

14 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, Ilford, London, United Kingdom

10 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom, Scarbrough, Canada

19 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, வவுனியா, வள்ளிபுனம்

18 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
38ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
மரண அறிவித்தல்

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Scarborough, Canada

17 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுவில், யாழ்ப்பணம், London, United Kingdom

13 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, வைரவபுளியங்குளம்

17 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, காங்கேசன்துறை, கோண்டாவில்

18 Oct, 2021
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, யாழ்ப்பாணம், Scarborough, Canada

16 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
மரண அறிவித்தல்

அளவெட்டி, Wellawatte

15 Oct, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Wembley, United Kingdom

18 Oct, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சூரியகட்டைக்காடு, நானாட்டான்

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பேர்லின், Germany

26 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கட்டைப்பிராய்

16 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, சில்லாலை, எசன், Germany

15 Oct, 1995
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US