பண்டோரா ஆவணங்கள் கிளப்பியுள்ள சர்ச்சை! இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ள விடயம்
பண்டோரா ஆவணங்கள்(Pandora Papers)மூலம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கைகள் உத்தியோகபூர்வமற்ற அறிக்கைகள் என ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம(Dilum Amunugama) தெரிவித்துள்ளார்.
சில ஊடகவியலாளர்கள் மேற்கொண்ட ஆய்வுகள் தொடர்பான விடயங்களே அவற்றில் உள்ளன எனவும் அவர் கூறியுள்ளார்.
இதனால், அவற்றில் முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களையும் உண்மை என்று கூற முடியாது எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் இந்த ஆவணங்களில் இலங்கையின் அரசியல்வாதி ஒருவர் தொடர்பாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பண்டோரா ஆவணங்களில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து கண்டியில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே திலும் அமுனுகம இதனை கூறியுள்ளார்.
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri