தமிழர்களின் விடுதலை வேட்கையை பேரினவாதத்தால் அடக்கி ஒடுக்க முடியாது: கிளிநொச்சியில் மாவை சூளுரை
தமிழர்கள் மீது என்னதான் பிரச்சினைகளைப் பேரினவாத அரசு ஏற்படுத்தினாலும் தமிழர்களின் விடுதலை வேட்கையை அடக்கி ஒடுக்க முடியாது என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் நிர்வாகத் தெரிவு நேற்று (30) கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் அரசுக் கட்சியின் அலுவலகமான அறிவகத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
தமிழர்கள் மீதான இனரீதியான ஒடுக்குமுறை
"இதுவரை காலமும் தமிழர்கள் மீது இன ரீதியான ஒடுக்குமுறைகளைப் பேரினவாத அரசு மேற்கொண்டு வந்தது. இப்போது தமிழர்கள் மீது மத ரீதியான பிரச்சினைகளையும் பேரினவாத அரசு உருவாக்கியுள்ளது.
என்னதான் பிரச்சினைகளை ஏற்படுத்தினாலும் தமிழர்களின் விடுதலை வேட்கையைப் பேரினவாத அரசால் அடக்கி ஒடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் த.குருகுலராஜா மற்றும் தமிழ் அரசுக் கட்சியின் செயற்பாட்டாளர்கள், மாவட்டக் கிளை நிர்வாகத்தினர் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 11 மணி நேரம் முன்

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

இந்தியாவை 100 ஆண்டுகளுக்கு மேல் ஆண்ட கிழக்கிந்திய கம்பெனி - இப்போது உரிமையாளரான இந்தியர் News Lankasri
