பதவிகளிலிருந்து விலகி நின்று அரசை வழிநடத்துகின்றோம்! - மஹிந்த தெரிவிப்பு
"நாட்டை இப்போதும் நாம் தான் ஆட்சி செய்கின்றோம். எமது கட்சி தான் இப்போதும் நாட்டை ஆள்கின்றது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் எமது பக்கமே நின்று பணியாற்றுகின்றார் என முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
"இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தமைக்கு நாட்டை உலுக்கிய கோவிட் பெருந்தொற்றே பிரதான காரணம். இதைப் புரிந்தும் புரியாதவர்கள் போல் எம் மீது சிலர் வசைபாடி புலம்பித்திரிகின்றார்கள்.
ராஜபக்சக்கள் வீழ்ந்துவிடவில்லை
நாடு வங்குரோத்து அடைந்தமைக்குக் கோட்டாபய ராஜபக்சவோ அல்லது ராஜபக்சக்களோ காரணம் அல்லர். ராஜபக்சக்கள் வீழ்ந்துவிடவில்லை. அவர்கள் பதவிகளிலிருந்து விலகி நின்று அரசை வழிநடத்துகின்றார்கள் என்பதே உண்மை.
நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைக்குத் தலைமை தாங்கக்கூடிய - வல்லமை பொருந்திய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தான்.அதில் மாற்றுக் கருத்து இல்லை. அவரும் நாங்களும் இணைந்து நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைக் காண்போம். இதற்குக் கட்சி, பேதமின்றி அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.





எதிர்நீச்சல் தொடர்கிறது: ஜீவானந்தம் உயிருடன் இருப்பதை அறியும் ஆதி குணசேகரன்! கொலை செய்ய வரும் அடியாட்கள் Cineulagam

பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri
