தமிழ் கட்சிகளின் சிதறல் தமிழ் மக்களுக்கே பாதிப்பு - பிரதமர்
உள்ளூராட்சி சபை தேர்தலில் ஆசனங்களுக்கு ஆசைப்பட்டு தமிழ் கட்சிகள் பிளவடைந்து பல குழுக்களாக போட்டியிட முடிவெடுத்துள்ளன.இது தமிழ் மக்களுக்கே ஆபத்தாக மாறும் என பிரதமரும், பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று வடக்கின் தேர்தல் நிலைமை தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள குழப்பம்
தமிழ் மக்களின் வாக்குகள் சிதறுண்டு உண்மையான பிரதிநிதித்துவத்தை அடையாளம் காண முடியாத நிலை ஏற்படும்.
"உள்ளூராட்சி சபை தேர்தலில் வடக்கில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட பிரதான கட்சிகள் தனித்தனியே போட்டியிடுகின்றன.
ஆனால், தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல தமிழ்க்கட்சிகள் சிதறித் தேர்தலைச் சந்திக்க முடிவெடுத்துள்ளன.
இது தமிழ் மக்களுக்கே குழப்பத்தை ஏற்படுத்தும். அவர்களின் வாக்குகளுக்குப்
பாதிப்பையும் ஏற்படுத்தும்.
தெற்கின் நிலைமை வேறு வடக்கின் நிலைமை வேறு. இதை தமிழ் கட்சிகள்
உணர்ந்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை? News Lankasri

முழுசா 10 ஆண்டுகளுக்கு பின் வரும் சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அதிஷ்டம் எந்த ராசிகளுக்கு? Manithan
