கிரிப்டோ கரன்சி நிறுவனத்துடன் எந்த தொடர்புமில்லை! நாமல் ராஜபக்ச
கிரிப்டோ கரன்சி நிறுவனத்துடன் தமக்கு தொடர்பு இல்லை என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கிரிப்டோமைனிங் மற்றும் பிட்கொயின் பரிவர்த்தனைகளை இயக்கும் ‘ஒன்மேக்ஸ் டிடி’ என்ற நிறுவனத்துக்கும், நாமல் ராஜபக்சவுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என்று அவரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறிப்பிடப்பட்ட நிறுவனத்துடனோ அல்லது அதனுடன் தொடர்புடைய எந்தவொரு தரப்பினருடனோ நாமலுக்கு எந்த தொடர்பும் இல்லை என அவரது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொருளாதார சூழலை உருவாக்க திட்டம்
OnmaxDT டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் அனுபவமுள்ளவர்களின் அறிவு மற்றும் அனுபவத்தைப் பயன்படுத்துவதன் மூலம் அனைவருக்கும் வலுவான பொருளாதார சூழலை உருவாக்க விரும்புவதாக குறித்த நிறுவனம் தன்னை விளம்பரப்படுத்துகிறது.
அனுபவம் வாய்ந்த மற்றும் புதியவர்களை முதலீட்டாளர் தொழில்முனைவோராக மாற்றுவதன் மூலமும், வேலைவாய்ப்பை உருவாக்குவதன் மூலமும், தொழில்நுட்ப நிபுணத்துவத்தை விரிவுபடுத்துவதன் மூலமும் இது நிறைவேற்றப்படுவதாக அந்த நிறுவனம் தெரிவித்து வருகிறது.
OnmaxDT அவுஸ்திரேலியாவை தளமாக கொண்டது என்று அறியப்படுகிறது.