நெருக்கடியிலிருந்து நாட்டை காப்பாற்றிய சிறந்த தலைவர் ரணில்!பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் புகழாரம்
நாட்டை நெருக்கடியிலிருந்தும்,பயங்கரவாதிகளிடமிருந்தும் காப்பாற்றிய சிறந்த தலைவர் ரணில் விக்ரமசிங்க என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன குறிப்பிட்டுள்ளார்.
அநுராதபுரத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நெருக்கடியிலான நேரத்திலும் நாட்டை பொறுப்பேற்ற தலைவர் என்பதினாலேயே அவர் மதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டைக் காப்பாற்றிய தலைவர்
மகிந்த ராஜபக்ச நாட்டை விடுதலைப்புலிகளிடமிருந்து காப்பாற்றியதைப் போன்று அண்மையில் தலைதூக்கியுள்ள பயங்கரவாதிகளிடம் இருந்து நாட்டைக் காப்பாற்றிய தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆவார்.
ரணில் விக்ரமசிங்க தனது சொந்த வீடு எரிக்கப்பட்ட போதும் நாட்டினை பொறுப்பேற்று ஆட்சியை வழமைக்கு கொண்டு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல் News Lankasri
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam