ராஜபக்ச நிறுத்திய இடத்திலிருந்து தொடரும் ரணில்! முஜிபுர் ரஹ்மான்
ராஜபக்ச நிறுத்திய இடத்திலிருந்து ரணில் தொடர்கின்றார் என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றிய போது முஜிபுர் ரஹ்மான் இதனைத் தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விட்ட இடத்திலிருந்து தற்போதைய ஜனாதிபதி ஊழல் ஆட்சியை தொடர்கின்றார்.
தேசிய கொள்கை
தலைகீழாக மாற்றப்பட்ட மக்கள் ஆணையின் ஊடாக முன்னோக்கி நகர முடியாது எனவும், இதனாலேயே அடிக்கடி மக்கள் எதிர்ப்பினை கிளப்புகின்றனர்.
தேர்தல் ஒன்றுக்கு சென்றால் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டவர்களின் தேசிய கொள்கைகள் பற்றி மக்களிடம் கேட்டறிந்து கொள்ள முடியும்.
தற்பொழுது நாடாளுமன்றம் தொடர்பில் மக்களுக்கு நம்பிக்கையில்லை எனவும் இதனை புரிந்து கொள்ளாது செயற்பட்டால் மீண்டும் நாடு அழிவுப்பாதை நோக்கியே நகரும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
