கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை: பொலிஸார் விசாரணை
ருவன்வெல்ல, குடாகம (Ruwanwella) பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ருவன்வெல்ல, குடாகம பிரதேசத்தில் நேற்று (30) இரவு இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் வீட்டைச் சுற்றி சுத்தம் செய்து கொண்டிருந்த போது, அவரது அண்ணனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது அவர் கூரிய ஆயுதத்தால் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் பொலிஸாரால் கைது
இந்த சம்பவத்தில் குடாகம, அமித்திரிகல பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
மேலும், கொலையுடன் தொடர்புடைய 40 வயதுடைய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ருவன்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜேர்மனியில் தொழிற்சாலைகள் மூடப்படுவதால் மற்றொரு ஐரோப்பிய நாட்டிற்க்கு அதிகரிக்கும் வணிக வாய்ப்புகள் News Lankasri
கலவையான விமர்சனங்கள்.. அவதார் 3 இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு? பாக்ஸ் ஆபிஸ் விவரம் Cineulagam