சுற்றிவளைக்கப்பட்ட இரகசிய முகநுால் விருந்து! 9 யுவதிகள் உட்பட 34 பேர் கைது
பாணந்துறை பகுதியிலுள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் சட்டவிரோதமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முகநூல் விருந்து ஒன்றினை இன்று பாணந்துறை வடக்கு பொலிஸார் சுற்றிவளைத்து 09 யுவதிகள் உட்பட 34 பேரை கைது செய்துள்ளனர்.
இந்த சோதனையின் போது, கஞ்சா, குஷ் மற்றும் மதுபானம் போன்ற பல போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
விருந்தின் போது யுவதி ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் சம்பவமும் பதிவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபர்களில் சிலரை பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தவுள்ளதாகவும் ஏனைய சந்தேகநபர்களின் பெற்றோரை அழைத்து வந்து பொலிஸ் பிணையில் விடுவிப்பதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

102 ஆண்டுகள் வாழ்ந்த வீட்டை விற்கும் பிரித்தானிய பெண்! காரணம் கூறும் 104 வயது மூதாட்டி News Lankasri

'வானத்தை உன்னிப்பாகக் கவனியுங்கள்' சர்வதேச நீதிமன்றத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல்.! ரஷ்யாவிலிருந்து மிரட்டல் News Lankasri
