இடைக்கால பட்ஜட் ஆகஸ்ட் 30 இல் சபையில் சமர்ப்பிப்பு
இந்த வருடத்தின் மீதமான நான்கு மாதங்களுக்கான இடைக்கால வரவு - செலவுத் திட்டம் இம்மாதம் 30 ஆம் திகதி நிதி, திட்டமிடல் அமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
மேற்படி இடைக்கால வரவு - செலவுத் திட்டம் தொடர்பில் அரசின் செலவினம் உள்ளிட்ட 30 ஆம் இலக்க குறைநிரப்பு பிரேரணை கடந்த 9ஆம் திகதி பிரதமர் தினேஷ் குணவர்தனவால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அந்தக் குறைநிரப்பு பிரேரணையில் 3 ஆயிரத்து 275 பில்லியன் ரூபா அரச செலவினமாகும். 2021 நவம்பர் 07 ஆம் திகதி அப்போது நிதி அமைச்சராகப் பதவி வகித்த பஸில் ராஜபக்சவால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு - செலவுத் திட்டத்தில் அரச செலவினம் 2 ஆயிரத்து 796 பில்லியனாக மதிப்பிடப்பட்டிருந்தது.
வரவு - செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு அதிகரித்த நிதி ஒதுக்கீடு
அந்த மதிப்பீட்டுக்கு மேலதிகமாக இம்முறை வரவு - செலவுத் திட்டத்தில் 479.4 பில்லியன் அதிகமாகக் காணப்படுகின்றது. கடந்த வரவு - செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு அதிகரித்த நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.
எனினும், இம்முறை வரவு - செலவுத்திட்டத்தில் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு அதிக முதல் ஒதுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் அந்த அமைச்சுக்கு 734.6 பில்லியன்
ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது அதிகரித்த நிதியாக பாதுகாப்பு
அமைச்சுக்கு 654.3 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 8 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
