இலங்கை வந்துள்ள அனைத்து நாடாளுமன்ற ஒன்றியத்தின் பொதுச்செயலாளர்
அனைத்து நாடாளுமன்ற ஒன்றியத்தின் பொதுச்செயலாளர் மார்டின் சொன்கொன் இலங்கையை வந்தடைந்துள்ளார்.
டுபாயில் இருந்து வந்த எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே 652 என்ற விமானத்தில் அவர் நேற்று நாட்டை வந்தடைந்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த போது விடுத்த அழைப்பிற்கு அமைவாக அனைத்து நாடாளுமன்ற ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் இலங்கைக்கு விஜயம் மேற்க்கொண்டுள்ளார்.

கலந்துரையாடல்கள்
இதற்கமைவாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்தன ஆகியோரை சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுப்படவுள்ளார்.

மேலும் நாடாளுமன்ற சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த மற்றும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரையும் சந்திக்கவுள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.


இவருக்கு வயது ஏறவே ஏறாதா? 40 வயதிலும் சுடிதாரில் ரசிகர்களை கிறங்கடிக்கும் தொகுப்பாளினி டிடி! Manithan