தினேஸ் குணவர்தன பிரதமராகும் சந்தர்ப்பம்! வெளியான தகவல்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வகுப்புத் தோழரான தினேஸ் குணவர்தனவை பிரதமர் பதவிக்கு நியமிக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும், அமைச்சர் தினேஸ் குணவர்தனவும் கொழும்பு றோயல் கல்லூரியில் ஒரே வகுப்பில் கல்வி கற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
2015 ஆம் ஆண்டில் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகித்த காலத்தில் தன்னுடன் வகுப்பில் கிரிக்கட் விளையாடிய நண்பன் இந்த நாட்டின் பிரதமராக பதவி ஏற்றுக்கொள்வார் என நினைத்துக்கூட பார்க்கவில்லை.
ஜனாதிபதியின் பாடசாலை பருவம்
2017ம் ஆண்டில் ஆங்கில ஊடகமொன்றுக்கு தினேஸ் குணவர்தன தெரிவித்திருந்தார்.தாங்கள் இருவரும் ஒரே நாளில் ஒரே வகுப்பில் சேர்ந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
ரணில் கல்லூரிக்கு அருகாமையில் வசித்து வந்த காரணத்தினால் நடந்தே பாடசாலைக்கு வருவார் என குறிப்பிட்டிருந்தார். அதன் பின்னர் தரம் மூன்றில் வைத்து முன்னாள் அமைச்சரும் சபாநாயகருமான அமரர் அனுர பண்டாரநாயக்கவும் தமது வகுப்பில் இணைந்து கொண்டதாக கூறியிருந்தார். ரணில் விக்ரமசிங்க கிரிக்கட் மற்றும் ரக்பி விளையாட்டில் ஈடுபாடுடையவர் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

1977ம் ஆண்டில் பியகம தொகுதியில் போட்டியிட்டு ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாக நாடாளுமன்றிற்கு சென்ற அதேவேளை, அதே ஆண்டில் அவிசாவலை தொகுதியில் போட்டியிட்ட தினேஸ் தோல்வியடைந்தார்.
தினேஸ் குணவர்தன பிரதமராக பதவி ஏற்கலாம்
எனினும் 1983ம் ஆண்டில் மஹரகம தொகுதியில் போட்டியிட்டு 27054 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு முதன் முறையாக நாடாளுமன்றம் தெரிவானார்.
இவ்வாறான ஓர் பின்னணியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமராக தினேஸ் குணவர்தனவை நியமிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளைய தினம் அநேகமாக தினேஸ் குணவர்தன பிரதமராக பதவி ஏற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் விஜய்யின் ஜனநாயகன் குறித்த வந்த சூப்பர் அப்டேட்... என்ன தெரியுமா? Cineulagam
புதன் வக்ர நிவர்த்தியால் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த 3 ராசிகளுக்கு தான்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
இவருக்கு வயது ஏறவே ஏறாதா? 40 வயதிலும் சுடிதாரில் ரசிகர்களை கிறங்கடிக்கும் தொகுப்பாளினி டிடி! Manithan