நாடாளுமன்றத்திற்கு முன் திடீரென ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய மன்னார் மக்கள்
இலங்கை நாடாளுமன்றத்திற்கு முன்னால் மன்னாரில் இருந்து சென்ற மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோயில் மேட்டை விவசாய காணி அபகரிப்பு செய்யப்பட்டு வருகின்றமையை கண்டித்து அண்மையில் மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பெரிய பண்டிவிரிச்சான் மற்றும் சின்னப் பண்டிவிரிச்சான் கிராம மக்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
எனினும் குறித்த காணி விவகாரத்தில் உரிய தீர்வு வழங்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.
இந்நிலையில் மன்னாரில் இருந்து இன்றைய தினம் கொழும்பு சென்ற மக்கள் நாடாளுமன்றத்திற்கு முன்பாக திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை இன்றைய நாடாளுமன்ற அமர்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 2 நாட்கள் முன்
கிரீன்லாந்திற்கு படைகளை அனுப்பும் ஜேர்மனி, பிரான்ஸ் - ட்ரம்ப்பிற்கு அழுத்தம் அதிகரிப்பு News Lankasri