இலங்கையில் வீட்டுப்பணியாளர்கள் தொடர்பில் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்
நாட்டில் பணிபுரியும் வீட்டுப் பணியாளர்களின் பணி நிலைமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விசேட முறைமையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தீர்மானித்துள்ளார்.
அதற்கான அனுமதிப்பத்திரத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு தொழிலாளர் ஆணையாளர் நாயகத்திற்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
அமைச்சின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வுகள் மற்றும் எதிர்கால வேலைத்திட்டத் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடலின் போது இந்த முறைமையை தயாரிப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு
தற்போது இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் ஊடாக வெளிநாட்டு வேலைகளுக்கு வீட்டுப் பணியாளர்களாக அனுப்பப்படும் தொழிலாளர்களின் பாதுகாப்பைக் கையாள்வதற்கான முறைமையொன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற போதிலும், வீட்டுப் பணியாளர்களை விசாரிப்பதற்கான முறைமை இல்லாமை குறித்தும் அமைச்சர் கவனம் செலுத்தியுள்ளார்.

இதன்படி, உள்ளூர்,வெளிநாட்டு வீட்டுப் பணியாளர்களை விசாரிப்பதற்கான அமைப்பை தயாரிக்குமாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உள்நாட்டில் வேலை செய்யும் வீட்டு வேலையாட்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும்,அவர்களின் பாதுகாப்பு மற்றும் பணி நிலைமைகள் குறித்து ஒரு சிறப்பு அமைப்பை தயாரிக்குமாறு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 14 மணி நேரம் முன்
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்களுக்கு சன் டிவி வெளியிட்ட குட் நியூஸ்.... என்ன தெரியுமா? Cineulagam
வீட்டுப் பிரச்சனைக்கு சிந்தாமணி தான் காரணம் என தெரிந்ததும் அதிரடி காட்டிய விஜயா... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
தமிழில் ரீமேக் ஆகப்போகும் தெலுங்கில் ஹிட் சீரியலான Chamanthi... யார் நடிக்கிறார்கள் பாருங்க... Cineulagam