இலங்கை குரங்குகளை சீனாவில் கோருவது யார்..! இன்று அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்
இலங்கையில் உள்ள குரங்குகளை சீனாவுக்கு அனுப்புவது தொடர்பில் இரு நாட்டு அரசாங்கங்களுக்கு இடையில் எவ்வித பேச்சு வார்த்தையும் இடம்பெறவில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றிருந்தது.
இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை குரங்குகள்

இலங்கையிலுள்ள குரங்குகளை சீனாவுக்கு வழங்குவது குறித்து எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில், தனியார் நிறுவனமொன்றே இலங்கை குரங்குகளை சீனாவுக்கு வழங்குமாறு கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri