குரங்கு ஏற்றுமதியின் பின்னணியிலுள்ள சதிதிட்டம் அம்பலம்
இலங்கையின் குரங்குகளை சீனாவுக்கு வழங்குவதன் பின்னணியில் கோடிக்கணக்கான கடத்தல் இருப்பதாக சுரக்கிமு ஸ்ரீலங்கா தேசிய இயக்கத்தின் பஹியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார்.
சீனாவிற்கு ஒரு இலட்சம் குரங்குகளை அனுப்புவது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தீர்மானங்களை ஏற்றுக்கொள்ள முடியாது

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,“விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர மற்றும் ஏனைய அமைச்சின் அதிகாரிகளால் எடுக்கப்படும் இவ்வாறான தீர்மானங்களை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு இலங்கை மக்கள் இல்லை.
உயிரியல் ஆராய்ச்சிக்காக குரங்குகள் இலங்கைக்கு வெளியே அழைத்துச் செல்லப்படுவதாக கூறுகின்றனர். ஆனால் இலங்கையின் குரங்குகளை சீனாவுக்கு வழங்குவதன் பின்னணியில் கோடிக்கணக்கான கடத்தல் இருக்கின்றது.
எனவே இந்த முடிவை மாற்றிக்கொள்ள எதிர்காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளோம்.”என தெரிவித்துள்ளார்.
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri