தேர்தலை ஒத்திவைக்க முயற்சிப்பவர்களுக்கு ஜீ.எல்.பீரிஸ் விடுத்துள்ள எச்சரிக்கை
தேர்தல் செலவீனங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலத்தின் பிரதான நோக்கம் தேர்தல் செலவீனங்களைக் குறைப்பதல்ல எனவும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைப்பதே எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரத்தில் தேர்தலை ஒத்திவைக்கும் நோக்கில் இடம்பெற்ற தொடர் நிகழ்வுகள், வைப்பு பணத்தை பெறுவதை நிறுத்துமாறு பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் அனுப்பிய கடிதம் உள்ளிட்டவை அரசியலமைப்பு விழுமியங்களுக்கு எதிரானவை என அவர் இன்று நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சட்டமன்றம் இன்று நிறைவேற்று அதிகாரத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்று கூறிய அவர், நாடாளுமன்றம் சபாநாயகரால் நடத்தப்படுவதில்லை, கண்ணுக்கு தெரியாத சக்தியால் நடத்தப்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைப்பது இலகுவான காரியம் அல்ல எனவும், தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தல் நடவடிக்கைகளை தொடர்வதாக உயர் நீதிமன்றில் உறுதிமொழி வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே யாரேனும் தேர்தலை ஒத்திவைக்க முயன்றால், அது நீதிமன்ற அவமதிப்பாகும் என்று ஜி.எல் பீரிஸ் எச்சரித்துள்ளார்.
இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும்
எதிராக சர்வதேச அரங்கில் முடிந்த அனைத்தையும் செய்யப்போவதாக அவர்
குறிப்பிட்டுள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை? News Lankasri

கார் பிரச்சனையில் தப்பித்த முத்து-மீனாவிற்கு வந்த அடுத்த அதிர்ச்சி.. என்ன செய்வார்கள், சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
