தனித்தனியாக போட்டியிட்டு பின்னர் கூட்டமைப்பாக செயற்படுவோம்! நா.சேனாதிராஜா
கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டு பின்னர் கூட்டமைப்பாக செயற்படுவோம் என தமிழரசுகட்சியின் செயற்குழு உறுப்பினரும் , முன்னாள் நகரசபை உறுப்பினருமான நா.சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்டத்தில் 5 உள்ளுராட்சி மன்றங்கள் உள்ள நிலையில் 4 சபைகளுக்கு போட்டி இடுவதற்காக இன்று கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த செயற்குழு உறுப்பினர்,

வவுனியா மாவட்டத்தில் இருக்கின்ற மூன்று பிரதேச சபைக்கும் ஒரு மாநகர சபைக்குமான உள்ளூராட்சி தேர்தலிற்கான கட்டுப்பணத்தினை இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பாக செலுத்தியுள்ளோம்.

தற்போதுள்ள தேர்தல் முறையின் படியும் அரசியல் சட்டத்தின்படியும் நூற்றுக்கு அறுபது வீதமான வாக்குகள் தான் கட்சியினால் பெற்றுக்கொள்ள முடிகிறது. ஏனைய நாற்பது வீதமான கட்சிகளெல்லாம் உதிரிக்கட்சிகளும், சுயேட்சை குழுக்களும் பெற்றுக்கொண்டு போவதனால் சபைகளை ஒழுங்கான முறையில் நிர்வகிக்க முடியாத சூழல் கடந்த ஆண்டுகளில் ஏற்பட்டதனை நீங்கள் எல்லோரும் அறிவீர்கள்.
அதனால் தான் மீதமுள்ள நாற்பது வீதமுள்ளவற்றையும் நாங்கள் பெற்றுக்கொள்ள மூன்று
கட்சிகளும் தனித்தனியாக கேட்டு அதன் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பாக ஆட்சி
அமைக்கும்
என கட்சியின் செயற்குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri